பூஜா கரானா கை/பேயோன்

இருட்டறையில் நின்றிருக்கிறார் உம்மாச்சி
அருகே நிற்கிறார் அவர் மனைவி
அவரும் உம்மாச்சிதான்
‘உட்காராமல் பண்ணிவிட்டானே இந்தச்
சிற்பிக்காரன்’ என்கிறார் உம்மாச்சி
‘பக்கத்து ரூமில் படுத்துக்கொண்டுதானே இருக்கிறீர்’
என்கிறார் மனைவிச்சாமி
‘படுக்க வேண்டாம், கால் மாற்றி நிற்கவாவது
வழி செய்திருக்கலாம்’ என்கிறார் புருடர்
யாரோ வந்து லைட்டைப் போடுகிறார்கள்
‘அப்பாடா கரண்ட்டு வந்தது’ என்கிறார் உம்மாச்சி
கொஞ்ச நேரத்தில் கூட்டம், அரவம்
‘வந்துவிட்டார்கள் வேடிக்கை பார்க்க’
அலுத்துக்கொண்டார் பெண் உம்மாச்சி
ஒரு ஆள் ஒரு தினுசாகப் பாட்டுப் பாடி
உம்மாச்சிகள் மேல் பாலை ஊற்றுகிறார்
‘மழை’ என்கிறார் உம்மாச்சி.

One Comment on “பூஜா கரானா கை/பேயோன்”

Comments are closed.