வ.வே.சு கவிதை

ஒரு வரி எழுதினேன்
அறிவுரை போலிருந்தது
அடித்துவிட்டேன்;

இன்னொரு வரி எழுதினேன்
இறைஞ்சுவது போலிருந்தது
எடுத்து விட்டேன்;

மற்றொரு வரி எழுதினேன்
ஒரு மார்கமாக இருந்தது;
மாற்றிவிட்டேன்;

அடுத்தவரி எழுதினேன்
அரசியல் போலிருந்தது;
ஆபத்து என அழித்துவிட்டேன்

நகைச்சுவை எழுதிப் பார்த்தேன்
படிப்போர் அடிப்பாரென்று
பக்கம் கிழித்துவிட்டேன்

மீண்டும் எழுதினேன்
பச்சையாய்க் கொஞ்சியது
அச்சத்தில் அகற்றி விட்டேன்;

இறுதியில் எழுதினேன்
தலைகால் ஏதுமின்றி;
ஆஹா என்றதை
அகிலமே ஏற்றது.

எழுத்தாளர் திரு
வவேசு
08/07/2022

One Comment on “வ.வே.சு கவிதை”

Comments are closed.