குறள் மூலம் கவிதை/நாகேந்திர பாரதி

இரண்டாவதாக காமத்துப்பால் , களவியல் , குறிப்பறிதல்அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

இதற்கு சுஜாதா அவர்களின் உரை
‘ பார்க்கிறாள் , பார்த்தால் தலை குனிகிறாள் , காதல் பயிருக்கு நீர் வார்க்கிறாள் ‘

அந்தக் காதலை தோல்விக் காதல் ஆக்கி எனது கவிதை .

காதல் பயிர்
————————-
என்னைப்
பார்க்காமல் போயிருக்கலாம் அவள்

பார்த்தபின்
சிரிக்காமல் போயிருக்கலாம் அவள்

சிரித்தபின்
பேசாமல் போயிருக்கலாம் அவள்

பேசியபின்
தொடராமல் போயிருக்கலாம் அவள்

தொடர்ந்தபின்
பிரியாமல் போயிருக்கலாம் அவள்

காதல் பயிர் வளர்க்கப்
பார்வை நீர் பாய்ச்சிவிட்டு

பயிரைப்
பிடுங்காமல் போயிருக்கலாம் அவள்
—————-நாகேந்திர பாரதி