ரமணாச்ரமம்/அரவிந்த் சுவாமிநாதன்

பகவான் ரமணரின் முன்னால் அடியவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அப்போது பகவான் ரமணரைப் பார்க்க ஒரு ஜெர்மானிய அறிஞர் வந்தார்.

ரமணரை விடத் தான் நிரம்பக் கற்றுள்ளோம்; பல விஷயங்கள் அறிந்துள்ளோம் என்ற எண்ணம் கொண்டிருந்த அவர், பகவான் ரமணரிடம், “சுவாமி! நான் நிறையக் கற்றுள்ளேன். பலர் பாராட்டும் படி வியத்தகு ஆராய்ச்சிகள் பல நிறையச் செய்துள்ளேன். உங்களிடம் புதிதாக நான் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்!” என்று சொன்னார்., கொஞ்சம் சலிப்புடன்.

அதற்கு பகவான் ரமணர் புன்னகை தவழும் முகத்துடன் “நீங்கள் நிறையக் கற்றுள்ளீர்கள் அல்லவா? அப்படிக் கற்றது அனைத்தையும் மறந்துவிட வேண்டும். அதுதான் நீங்கள் இங்கு கற்றுக் கொள்ள வேண்டுவது” என்றார்.

அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத அந்த அறிஞர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமானார்.

‘தனக்கு எல்லாம் தெரியும்’ என்ற ஆணவத்தை விடுத்து, ‘எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்ற பணிதல் தான், ‘சரணாகதி’ தான் ஆன்மிக ஞானத்தின் அடிப்படை என்பதைப் புரிந்த அடியவர்கள் மௌனமாகினர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

One Comment on “ரமணாச்ரமம்/அரவிந்த் சுவாமிநாதன்”

Comments are closed.