நிராதரவின் வலி/வசந்ததீபன்


அடிமைப்படுத்துவது  

அன்போ… அதிகாரமோ…

துன்புறுத்துவது  

உறவோ…  பகையோ…

சுதந்திரம்  எக்காலத்தும்  எந்நிலையினும்  மேன்மையானது

உன்னைத்  தின்ன  

என்னால்  முடியாது

என்னைத்  தின்ன  

உன்னால்  முடியாது

காலம்  நம்மைத்  தின்ன  

கொக்காய்  காத்திருக்கிறது

அனாதையாய்  பிறப்பது  

எதிர்பாராத  காயம்

ஆதரவற்று  வாழ்வது  

சீழ்கட்டிய  ரணம்

அவ்வப்போது  கனவுகளே  நித்ய  சுகம்

தேடித்தேடி  சேர்க்கிறார்கள்

மூடி மூடி  சேமிக்கிறார்கள்

மூடர்கள்  வாடி  

உதிர்ந்து  மறைகிறார்கள்

பேச  பேச  மனசு  இனிக்கிறது

வாய்மூடி  விட்டால்  

நீருக்குள்  மூழ்கித்  

தவிப்பது  போல்  திணறுகிறேன்

உரையாடலில்  இதயங்கள்  

உற்சாக  நடனமிடும்

நீண்ட  நாட்களாக  எதிர்பார்க்கிறேன்

இன்னும்  வந்து  சேரவில்லை

நானும்  காத்திருப்பை  

விட்டு  விடவில்லை.

ஆற்றில்  பூக்களை  தூவுங்கள்

சாகடிக்கப்பட்டவர்கள்  

ஏற்றுக்கொள்ள  மாட்டார்கள்

சாகடித்தவர்களை  தூக்கி  வீசினால்  பெற்றுக்கொள்வார்கள்.