
அறுபத்து இரண்டரை வயது மனிதனுக்கு
அம்மா இல்லாதது ஒரு குறை இல்லை
பெரிய அதிர்ச்சி இல்லை
அழுகை கூட இல்லை
நேற்று அம்மாவின்
நினைவு நாள்
அம்மாவின் முகத்தை
அவள் முத்தத்தை
அவள் கொஞ்சுதலை
பொய்க் கோபத்தை
சமாதானச் சொல்லை …
துளியேனும்
ஒரு முன்னெச்சரிக்கையோடு
ஓர் இரண்டரை வயதுக் குழந்தை
நினைவில்
தேக்கி வைத்துக் கொள்ளப்
பழகு முன்
மரித்துப் போன
அம்மாவின்
அறுபதாவது நினைவு நாள் நேற்று.

நெஞ்சைத் தாக்கிய வரிகள் – கி.பாலாஜி
இளவயதிலேயே தாயன்பு இல்லாமல் போனது வருத்தமே. தங்கள் தந்தையின் மீதான அதீத பாசத்தின் காரணம் புரிகின்றது.
ஊசி குத்தும்போது மரத்துப் போக வைத்தியர் எதையோ தடவினாலும், அதன் உண்மையான வலி என்பது ஊசி குத்தப்பட்ட பின்னால் தொடர்ச்சியாக வலிப்பது தான். நியாயமான ஆசைகள் கிடைக்காமல் போவதும் பெரிய வலிதான்.
அம்மாவின் அன்பு ஸ்பரிசம் இன்னும் மணக்கும் அறுபது வயசு குழந்தையிடம்.
அம்மா இல்லாத குறையை யாரிடம் சொல்வது தம்பி?
புரிகிறது !
அன்பு
உணர்ச்சிகளையும்,உணர்வுகளையும்.
எத்தனை வயதானாலும் அம்மாவற்கு நாம் குழந்தைகள் தான். முதல் அன்பு அல்லவா? மறக்க முடியுமா?
எத்தனை வயதானாலும் அம்மாவற்கு நாம் குழந்தைகள் தான். முதல் அன்பு அல்லவா? மறக்க முடியுமா?
👏
தாய்ப்பால் சுவை கூட மறந்து போகு முன் பிரிந்த உணர்வு. அருமையான அஞ்சலி 😭
அழகாக கடத்தி விட்டீர்கள் உங்கள் உணர்வுகளை படிப்பவர்கள் கும்.
அம்மா என்ற சொல் கேட்கும்போதே மனதுக்கு இன்பம். ஆனால் பிரிவை நினைத்தால்……..
அம்மா கவிதை ஒவ்வொரு ருக்கும் ஸ்பெஷல். யாராவது சித்தியைப் (ராதிகா இல்லை) பற்றி எழுதுங்களேன்!
**
சிறகு இரவி
அருமை…நெகிழ்ச்சியான
சொல்லோட்டம் நெஞ்சை நனைக்கிறது.
துக்கம் அனுஷ்டிக்கக் கூடத் தெரியாத இரண்டரை வயது குழந்தையின் உருவம் மனதில் தேங்கி அழ விடாமல் தொண்டையை அடைக்கிறது
இரண்டரையில்
இருண்டறை வாழ்க்கை
திரண்ட அறிவோடு வளர்ந்ததால் எதற்கும் மிரண்டதில்லை
வாழ்க. எஸ்.வி.வி
இரண்டு வயதில் தாயின் வாசம் புரியாது… தாங்கள் பொழியும் அன்புக்கு இனையே இல்லை என்பதற்கு காரணம் புரிகிறது
அருமையான கவிதை
அம்மா இருக்கும் வரை
யாருக்கும் வயதாக இல்லை.
அறியாத ஒன்றின்
அனுபவத்தை எழுத
பண்பட்ட அறிவு முதிர்ச்சி தேவை
இருக்கிறது உங்களிடம்
you can see the unadultered love pouring from the eyes of the mother while she is feeding her child..
..Milton
வாழ்த்துக்கள்
உணர்ச்சிகலளின் சங்கமம்
அதிர்ச்சியையும்
அழுகையும்
எங்களுக்கு
அளித்த
அருமையான
கவிதை.
எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது என்பதற்காக அம்மாவை படைத்ததாக சொல்வார்கள் .அம்மாவும் இல்லாத காரணத்தினால் தாயின் பரிவுடன் கூடிய ஒரு இணயரை உங்களுக்கு அளித்துள்ளார்
அறுமை. அம்மாவின் பாசம் என்றும் அருமை. அதை சிறு வயதில் இழந்த சோகத்தை இத்தனை சுருக்கமாய் சொன்னது அருமை.
அறுபத்தி இரண்டானால் என்ன?
அம்மாவின் அருமை அம்மாவின் அருமைதானே,,,!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.