
திருமணத்தன்று எடுத்த
ஸ்டூடியோ புகைப்படத்தைத் தவிர
வேறு எந்த புகைப்படத்திலும் பாட்டி இல்லை
அப்பாவின் பணி ஓய்வு தின புகைப்படத்தில்
இருந்த முப்பது பேரில்
ஒரு பெண்மணி கூட இல்லை
என் வாழ்க்கையில் இல்லாததால்
என் வீட்டு புகைப்படங்களில்
அவனில்லை
மனுவின் ஆணையை சிரமேற்கொண்டு
ஒரு தம்பதியர் நான் வளர்த்த குழந்தையை
அவள் பதிக்கு தானம் செய்ததால்
என் மகளின் திருமண புகைப்படங்களில்
நானில்லை

கழிவிரக்கம் பேசும்
கவிதை இன்னும்
எத்தனை நாள்?
#
சிறகு இரவி