
வாகனங்கள்
அணிவகுத்து
மொந்தைக்காக
நீளும்
மந்தையாக
மாறும் விந்தை
தமிழனுக்கே
சொந்தம்
சாளரங்கள்
வழிவிலகப்
பானகங்கள்
வளரும்
தகனமேடை
தேகமெங்கும்
கோபக்கனல்
எழுப்பும்
வர்ணங்கள்
நுரை ததும்பி
பாத்திரங்கள்
நிறைக்கும்
இருகாலும்
உள்நாக்கும்
ஒன்றாகப்
புரளும்
ஆடவர்கள்
உடைநழுவித்
தெருவெங்கும்
தவழ
செந்தமிழன்
தலைகவிழும்
நகரெங்கள்
நகரே..

சோம பானம்
சோமு பானம்
ஆன விந்தை
மாமு கொடுத்த
திராவிடக் கொடை
பாரெங்கும் பார்
திறந்த எப்போ
பேனா திறந்தாரோ!
#
சிறகு இரவி.