
குளித்து முடித்து
குடிக்கலாமென
நீ வைத்துவிட்டுப் போன மணம் பரப்பும்
ஒரு கோப்பைத் தேநீர்
சக்கரை நோயாளி முன்வைக்கப்பட்ட
ஜிலேபி போல
என்னைத் தூண்டிட குளியலறை கதவு திறக்கப்படும் முன்
குடித்து முடித்து
திருட்டு மாங்காய்
கடித்தபோது
மாட்டிக் கொண்டவன் போல் திருதிருவென முழிக்கும் என் முழிகளை
கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிற தவிப்பில்
மென் கூந்தல் வாசம் பரப்பி
நீ வந்த போது
உன்னை
வரவேற்கும்
வெற்றுக்கோப்பையை பார்த்துவிட்டு
நீ என்னைப் பார்க்கும் நேரம் குடித்திருக்கக் கூடாது
எனத் தோன்றும்
மனதை
என்ன செய்யலாம் ?
