சிறுகதைப் போட்டியில் பரிசு கிடைக்கவில்லை – சுஜாதா


1960’களில் குமுதம் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்துகிறது. சுஜாதாவும் கதை எழுதி அனுப்புகிறார். பரிசு கிடைக்கவில்லை.
இனி சுஜாதா வார்த்தைகளில் :
“ஒரு அற்புதமான கதை எழுதி அனுப்பினேன் (எனக்கு மட்டும் அற்புதம்). அது போர்ட்டுக்குக் கூட வரவில்லை.
முதல் பரிசு பெற்ற கதையைப் படித்து ‘இந்த அடாசுக்கு கொடுத்திருக்கிறார்களே, என் காவியத்தை நிராகரித்துவிட்டார்களே’ என்று பத்திரிக்கை உலகத்தின் மீது ஹோல்சேலாக வெறுப்பு ஏற்பட்டு ஆத்திரத்தில் ரயில் பாதையைக் கடந்து………………………..

……………. எதிரே இருந்த பங்க் கடைக்குச் சென்று முடி வெட்டிக்கொண்டு வந்தேன்”

😂😂