விளையாட்டு/அழகியசிங்கர் 

விளையாட்டில் சில விதிகளுண்டு

விதிகளில்லா ஆட்டமில்லை

ஆட்டத்தை முடிக்க

இரு அணிகள் வேண்டும்

தோற்பவர் ஓர் அணிஜெயிப்பவர்

 ஓர் அணி

ஒருவர் பெறும் வெற்றியில்

இன்னொருவர் தழுவும் தோல்வி

தளர்ந்து போகும் மனநிலை தோற்பவருக்கு

உலகமே தலைகீழாய் ஓடும்

எக்களிப்பில் வெற்றி கண்டவர்

ஆட்டமோ காட்டும்

ஆட்ட விதிகளை மாற்றி

விளையாட்டை ரசிக்கும்

பார்வையாளருக்கு வேடிக்கைகட்சிப்பிரிந்து

 அவர்கள் ஆடும் ஆட்டம்

வேறொன்று

நிதானமிழப்பவர் அவதிப்படுவர்

விளையாட்டு வீரர்களைப்போல்

விதிகளில்லா ஆட்டம் எங்குமுண்டு

வெற்றியும் தோல்வியும் இல்லை

பார்வையாளர்களே ஆட்ட வீரர்கள்