
வலதை சரி செய்கிறேன்
இடது சரியில்லாம் தெரிகிறது…….
இடதை சரி செய்கிறேன்
இப்பொழுது
வலது சரியில்லாம் தெரிகிறது
இரண்டையும் சரி செய்கிறேன்
அது வேறொன்றாக தெரிகிறது
வேண்டவே வேண்டாம் என்று
வழித்து விட்டேன் மொத்தமாய்
இப்பொழுது நானே தெரிகிறேன் மற்றொருவனாய் எனக்கு

ஹா.ஹா.
இன்னும் எதை எதை சரி செய்யப் போய் நானே இல்லாமல் ஆகி விடலாம்?