துவம் என்கிற வடமொழி/கோகுல் பிரசாத்

துவம் என்கிற வடமொழி விகுதியைப் பயன்படுத்தி நிறைய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தத்துவம், முக்கியத்துவம், தனித்துவம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். இவை எவையும் தமிழ்ச்சொற்கள் ஆகாது.

தத்துவம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். தத் எனில் அது எனப் பொருள். துவம் என்றால் தன்மை எனப் பொருள். அதன் தன்மை என்பதே தத்துவம். சில இடங்களில் ‘நீ’ என்ற பொருளிலும் துவம் பயின்றுவரும். அந்தச் சமயத்தில் தத்துவம் என்பது ‘அதுவே நீ’ என்றாகிவிடுகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் தமிழ் இலக்கண விதிகளின்படி துவம் பொருந்தாது.

ஒரு சொற்றொடரில் ‘இது முக்கியத்துவம் வாய்ந்து’ என நீட்டி எழுதுவதற்குப் பதில் ‘இது முக்கியமானது’ எனச் சுருக்கமாகவே எழுதிவிடலாமே?

தனித்துவம் என்பதைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் தனித்தன்மை, தனித்த போன்ற சொற்களே சரியான தேர்வாக இருக்கும். இதைப் போல, நவீன (தன்மை), பின்நவீன (தன்மை) ஆக்கங்கள் என்பவையே முறையான பொருளைக் குறிப்புணர்த்தும்போது ‘துவம்’ என்பது தேவையற்ற சுமையே.

One Comment on “துவம் என்கிற வடமொழி/கோகுல் பிரசாத்”

Comments are closed.