குமுதத்தில் ராஜேஷ்குமார்

.

குமுதத்தில் ராஜேஷ்குமார்
நாவல் தொடராக எழுதும் போது ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் இவரை அழைக்கிறார். “இவ்வளவு நாளா கத்தி, கொலை என்று க்ரைம் நாவலாக எழுதி வருகிறீர்கள். இதிலிருந்து மாறுபட்ட ஒரு விஞ்ஞானம் தொடர்பான ஒரு முயற்சி. தமிழ்நாடு முழுக்க மாணவர்களிடமிருந்து கேள்விகளை கேட்டு வாங்க உள்ளோம். அதற்கு நீங்கள் வாராவாரம் விகடனில் பதில் கொடுக்க வேண்டும்” என்றார். சரி மாணவர்களுகாக இதைச் செய்யலாம் என்று ஒத்துக் கொள்கிறார் ராஜேஷ்குமார்.

  1. வௌவால் ஏன் தலைககீழாகத் தூங்குகிறது?
  2. கொக்கு ஏன் ஒத்தைக் காலில் நிற்கிறது?
  3. மாம்பழத்திற்குள் எப்படி வண்டு வருகிறது?
  4. கொக்குக்கும் நாரைக்கும் என்ன வித்தியாசம்?
  5. பச்சோந்தி எப்படி நிறம் மாறுகிறது?
  6. கல்லுக்குள் தேரை எப்படி வாழ்கிறது?

கொக்கு வெண்மை நிறத்தில் மட்டும் இருக்கும். நாரை பல்வேறு நிறங்களில் இருக்கும்

கொக்கின் எடை 5கிலோ. அதன் கால்கள் அதன் உயரத்தில் பாதி அளவு. ஆக பெரிய மீன் வரும் வரையில் கொக்கு கால் வலி தொடராமல் இருக்க ஒரு காலை மாற்றி ஒரு காலில் நின்று பேலன்ஸ் செய்து கொள்கிறது.

வௌவால் கால்கள் மிகவும் மென்மையானது. அது கொக்கி போல ஒரு கம்பியில் மாட்டிக் கொண்டு தூங்க மட்டுமே பயன்படுகிறது. அந்தக் கால்கள் நடந்தால் ஒடிந்து விடும்.

இதுபோன்ற கேள்விகளுக்கு எல்லாம் இணையத்தில் தேடிப் படித்து அறிந்து பதில் சொல்லி வந்தார். நூறு வாரங்கள் ஓடியது.

தினமலரில் அழைப்பு வருகிறது. இன்னும் கொஞ்சம் கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் நியூட்ரான், ஹைடிரோ கார்பன், மொபைல், டிவிட்டர் இவைகள் எல்லாம் வரமா?சாபமா? என்ற தலைப்பில் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

கூடவே டி.என்.வி. ஜீன், குரோமிசம் இவைகளைப் பற்றி எல்லாம் அறிந்து அவைகளை நாவல்களில் பயன்படுத்தினார். அவைகளைப் பற்றி அறிந்து கொள்ள கோவை விவசாயக் கல்லூரி பேராசிரியரிடம் ஒருவாரம் ட்யூஷன் எடுத்துக் கொள்கிறார். நாவலில் ஒருவர் “எங்கள் பரம்பரையில் அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என்று பரம்பரையாக 49 வயது ஆரம்பித்து 50வயதுக்குள் இறந்து விட்டார்கள். எனக்கு இப்போது 48 வயது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?”. அப்போது ஜீனோதெரபி முறையில் ஜீனை மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி எல்லாம் இணையத்தில் தேடி மருத்துவர்கள் வியக்குமளவுக்கு நாவல்களில் விஞ்ஞானத்தைக் கொண்டு வந்தார். அது போன்ற நாவல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தகவல் : ஆர்.கந்தசாமி