
முப்பது வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கு அவள் தொண்டை கட்டி அக்கா. அதற்கென்ன செய்வது? சுந்தரியின் குரலே அப்படித்தான். அது ஒரு வசீகரம். சிறுவயதில் இது குறைபாடாகத் தெரியவில்லை. யாரும் கவனிக்கவில்லை. அல்லது கவனிக்க யாருமில்லை.
அவள் அம்மாவுக்கு நிகழ்ந்தது அவளுக்கும் நிகழ்ந்தது, புருஷன் வேறொருத்தியுடன் ஓடிப்போவது.
இதோ இவளும் இவள் அம்மா மாதிரியே இப்பவும் பூ விற்கிறாள். இருக்கிற ஒரே பெண்ணாவது இதைத் தொடரக் கூடாது. இது என்ன இது, எதுவுமே தொடரக் கூடாது.
பின்னால் திரும்பி என்னத்தையோ படித்துக் கொண்டு இருக்கும் பெண்ணைப் பார்க்கிறாள். அது பென்சிலை வாயில் கடித்து, கணக்கிலோ அல்லது பென்சிலின் உவர்ப்பு சுவையிலோ லயித்துக் கிடந்தது.
அவள் அப்பனையே உரித்துக் கிடக்கிறது அது. கண் அதேமாதிரி சிறியதாக. அப்பனிடத்தில் இருக்கும் கபடு இதன் கண்களில் தென்படுவதில்லை. இது தன்னை மாதிரி போக்கிரியும் இல்லை. யாரையோ அவசியம் இல்லாமல் கொண்டிருக்கிறது. இது இல்லாவிட்டால் இந்நேரம் சுந்தரி, மணி செய்த துரோகத்திற்கு வேறு யாருடனாவது குடும்பம் நடத்திக் கொண்டு இருப்பாள்.
இது நாலு வயதாக இருக்கும் போதுதான், மணி, அவனோடு கூட வேலை செய்யும் பெண் ஒருத்தியை முதன்முதலாக வீட்டிற்குக் கூட்டி வந்தது.
சுந்தரி அன்றைக்கே பெரிதாக குத்தாட்டம் ஆடினாள். அதைவிட அவள் அம்மா இன்னும் ஆடினாள்.
உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள் என்று அவன் போயே போய் விட்டான்.
கோர்ட்டுக்குப் போ என்றார்கள். அதற்கெல்லாம் காசு ஏது? அதைவிட அவனே ஒரு போலீஸ்காரன். ரயில்வே போலீஸ் என்றாலும் போலீஸ் போலீஸ் தானே?
அவளது பதினெட்டு வயதில் தானே அந்த விபரீதம் ஆனது?
சுந்தரி கோதுமை நிறம். நிகுநிகு என்று இருப்பாள். வயதுக்கு மீறிய வளர்த்தி. வாளிப்பு.
ஆனாலும் அவளை யாரும் சீண்ட முடியாமல் அரணாக இருந்தது அவள் அம்மாவும் , அவள் வழியாக வந்த வாய்த்துடுக்கும் தான்.
குரல் கம்மியிருந்தாலும் வார்த்தைகள் தடித்துதான் விழும்.
ஒரே தொழிலைச் செய்ய வேண்டாம் என்று அவள் அம்மா இவளை பழம் விற்கப் பழக்கி இருந்தாள்.
அது பலாப்பழம் சீஸன்.
“பலாச்சுளை எவ்வளவும்மா”
“உனிக்கு எத்தினி வேணும்?”
அவர் கொஞ்சம் துணுக்குற்று, “நீ சொல்ற வெலையப் பொறுத்து தீர்மானம் பண்ணனும்மா”
“கைல துட்டு இன்னாய்யா வெச்சுக்கீற?”
“கொஞ்சம் மரியாதையாப் பேசக் கூடாதாம்மா?”
“ஏன்… நீ என்னோட ஊட்டுக்காரனா இன்னா? நீ மட்டும் என்னிய நீ, வா, போன்னு சொல்லலாம்…நா சொல்லக் கூடாதா இன்னா”
“அட ஆண்டவனே.. ” என்று நகர்ந்தவரைத் தொடர்ந்தது அவளது வடிகட்டிய குரல்..
“வண்ட்டானுங்க… மஞ்சாப்பையத் தூக்கிக்கினு… பலாச்சுளை துன்னுற மூஞ்சப் பாரு… யோவ்… கசுமாலம்…ஒன்னத்தான்யா… கண்டுக்காம போறாம்பாரு கய்தே… அப்டியே ஓசில மோப்பம் புட்ச்சுக்கினே போ… பலாச்சுளை துன்ன மாதிரியே இருக்கும்… காசோட செத்தாலும் சாவானுங்களே கண்டி ஏழபாழைக்கு எட்டணா கொடுக்க மாட்டானுவ”
மகள் தைரியமாக உலா வருவதில் அவள் அம்மாவுக்கு ஏகப் பெருமை..
ஆனாலும் பழக்கடையில் சேதாரம் அதிகம் என்பதும் முதலுக்கே சமயங்களில் மோசம் வந்து விடுவதாலும், தங்கள் பரம்பரைத் தொழிலான பூ கட்டி விற்பதற்கு அவளைப் பழக்கினாள்.
ரயில்வே ஸ்டேஷன் வாசலிலேயே அவர்களுக்கு பட்டா போடாமல் உரிமை கிடைத்து இருந்த நிலையில் தான் மணியுடன் முதல் மோதல் ஏற்பட்டது.
மணியும் இளைஞன் தான். சுந்தரியை விட நிறம் கம்மி. ஆனாலும் வசீகரமாக இருந்தான்.
சுந்தரியை முதன்முதலில் பார்த்த போது அவனுக்குள் ஏதோ தயிர்ப்பானை உடைந்தது போல் உடைந்து ஓடியது. ஆனாலும் ஒருநாள் ஒரு வயதானவரை அவள் வெளுத்து வாங்கியதைக் கண்டு சற்றே பின் வாங்கினான். அவனது முழியே சரியில்லை என்று அவள் அம்மா அவளை அடிக்கடி எச்சரித்து வந்தாள்.
அவளைப் பார்த்தால் அவனுக்கு நாயன சத்தமும், அவனது கள்ள விழிகளைப் பார்த்தால் அவளுக்குள் தவில் சப்தமும் கேட்க ஆரம்பித்தன.
அவளது பரந்த விழிகள் மான் போல இருந்தாலும், அதில் மருட்சி இல்லாமல் புலி போல வேட்டையாடும் வேட்கை இருந்ததாகவே தோன்றியது அவனுக்கு.
லேசாக அவளுடன் வம்பு செய்ய ஆரம்பித்தான். அவள் அதற்கெல்லாம் கடுமையாக பதிலடி கொடுத்து வந்தாள்.
ஒரு நாள் அவளிடம் சண்டையிட்டு விட்டு, தாங்க முடியாமல் பதிலுக்குத் திட்டிய ஒரு மனிதரை அவள் ரயில் நிலையத்தின் உள்ளே அடித்துவிட, காவல் பணியில் இருந்த மணி, இதுதான் சமயம் என்று அவளது கையைப் பிடித்து நிலையத்திற்குள் கொண்டு செல்ல முயன்றான்.
பயணிகள் அங்குமிங்கும் பரபரப்பாக இயங்கினாலும் யாரும் அவள் உதவிக்கு வரவில்லை. அவளது கம்மிய குரல் மேலும் கம்மி அவளால் குரலுயர்த்தி அவள் அம்மாவையோ யாரையோ கூப்பிட முடியவில்லை.
சுந்தரிக்குள் இருந்து விம்மல் வெளிப்பட்டது. அவள் அதற்காகக் கலங்காமல் மணியின் இரும்புப் பிடியில் இருந்து வெளிப்படப் போராடினாள்.
அவள் திமிறியதை சாக்கிட்டு, மணியின் வலுவான கைகள் அவள் தேகமெங்கும் பிடிப்புக்காக அலைவது போல் அலைந்தன.
ஒரு கட்டத்தில் அவள் தாங்க முடியாமல் பெரிதாக அழவாரம்பிக்க, ரயில் நிலைய அதிகாரிகள் ஓடிவந்து, அவளை மீட்டனர்.
அவன் தரப்பு நியாயம் ஓங்கி ஒலித்ததில், அவள் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப் பட்டாள்.
மறுநாளே மணி அவளிடம் வந்து மன்னிப்பு கேட்டான். கன்றிப் போயிருந்த அவளது புஜங்களை அவன் தடவ முயன்றதை அவள் தடுத்தாலும், அவளது பெண்மை விழித்துக் கொண்டு விட்டது.
அவள் அம்மா ஒப்புக் கொண்டாலும் தஞ்சாவூரில் இருந்த மணியின் பெற்றோர் அனுமதிக்கவில்லை.
ஆளரவமற்ற ஒரு பிள்ளையார் கோயிலில், அவர் அசதியாகக் கண்ணயர்ந்திருந்த நேரத்தில் மணி அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
மல்லிகா பிறக்கும் வரையில் ஆசையாகத் தான் இருந்தான்.
அவளைப் பிடித்த போதாத காலம், அவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது.
அவனைப் பொறுத்த மட்டில் அவன் பெரிய மனது பண்ணி இரண்டு பேரோடும் வாழ ஒப்புக் கொண்டாலும் சுந்தரி இன்னொருத்தியை ஏற்கத் தயாரில்லை.
அவளுக்குப் படிப்பறிவு இல்லாத பாவம், அவர்கள் திருமணத்திற்கு சாட்சியில்லை.
இதோ பெண் வளர்ந்து கொண்டே வருகிறாள். இவளும் தன்னைப் போலத் திரட்சியாக வளர்வதில் சுந்தரிக்கு திக்கென்று பயம் பிடித்துக் கொண்டு விட்டது.
தினமும் தன்னுடன் அழைத்து வர ஆரம்பித்து விட்டாள்.
எப்பாடு பட்டாவது அவளைக் கரையேற்றி விடவேண்டும்.
அம்மா போனதில் இருந்து அவள் முழுநேர பூக்காரி ஆகிவிட்டாள்.
மணியின் நம்பிக்கை துரோகம் என்ன செய்தாலும் இவள் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.
இத்தனைக்கும் இவள் தான் அழகி. நிறமாகட்டும், ஆகிருதியாகட்டும் இவளைத் திரும்பிப் பார்க்காமல் போகிறார்கள் என்றால் துடுக் துடுக்கென்று பேசி அவமானப் படுத்துவது தான். ஆனால், அதுவும் வேண்டித் தான் இருக்கிறது. ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணைத் துறந்து இன்னொரு பெண்ணை நாடி ஓடுகிறான் என்பது இந்த சமூகத்தில் தான் எத்தனை துன்பங்களை, எத்தகையதொரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தி விடுகிறது?
தந்தையில்லாத பெண் குழந்தைகளை அது மனதளவில் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதையெல்லாம் கொஞ்ச காலம் அனுபவித்து விட்டு, சுந்தரி தன்னை மாற்றிக் கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டாள்.
தலையை சிங்காரித்துக் கொண்டாள். குடிசை வீடுகளின் மூங்கில் படல் போல் தன்னை மூடியிருந்த நிறமிழந்த புடவைகளை மாற்றி, கல்யாண ஓடை போல தன் தோளில் இருந்து நழுவ விட்டாள்.
ரயில் நிலைய புனரமைப்பு வேறொரு இடத்திற்கு அவளைத் தள்ளியது.
நல்ல வேளையாக அந்த ஊரின் சிவன் கோயில் புதுப்பொலிவு பெற்றிருந்தது.
அந்தக் கோயிலுக்கு இரண்டு வழிகள் உண்டு.
கிழக்குப் பக்கம் ஒரு வாசல். அது மிகவும் குறுகலான ஒரு தெருவில் அமைந்து இருந்தது. அதில் நூறடிக்கு ஒரு அழகான ராஜகோபுரம் புதிதாகக் கட்டப்பட்டு இருந்தது.
இன்னொரு வழி தெற்குப் பார்த்தது. அந்த வழியை ஒட்டி ஒரு குறுகலான சந்து நெரிசலாக இருசக்கர வாகனங்களாலும் பாதசாரிகளாலும் உபயோகப்படுத்தப் பட்டிருந்தது.
அது இணையும் இடத்தில், பஸ் நிலையத்தில் இருந்து சப்வே வழியாக உள் நுழையும் சாலை, தெற்கு வாசலை ஒட்டி வளைந்து மற்ற நகர்களுக்குள் உட்புகும்.
மிக அதிக அளவில் போக்குவரத்து நெரியும் இடம் அது.
சாலைக்கும் மேற்கே செல்லும் குறுகல் சந்தும், சந்திக்கும் தெற்கு வாசல், கோபுரமில்லாது விசாலமாக இருக்கும்.
அந்த இடத்தில் கடை போட்டு இருந்த சாதுவான மலர்விழி என்ற பெண்ணை மிரட்டி நகர்த்தி விட்டு, அந்த சாதுரியமான மூலையில் சுந்தரி தன்னுடைய தாற்காலிக நிறுவனத்தை ஸ்தாபித்துக் கொண்டாள்.
அவளது உடையலங்காரமும், நைச்சியமான கொஞ்சலும் சீண்டலும் அவசியம் இல்லாத இடத்தில் நறுக்கி விடும் இயல்பும் அவளுக்கு வருமானம் பெருக உதவின.
அவள் உட்காரும் அழகை சொல்லி மாளாது.
ஒரு காலைத் தொங்கப்போட்டு, இன்னொரு காலை இருக்கையில் குத்திட்டு நிற்க வைத்து காலழகைக் காட்டிய வண்ணம் அமர்வது அவளுக்கு லொகுவாகவும் மற்றவர்களுக்கு மயக்கம் தருவதாகவும் அமைந்தது.
தெற்கு வாசலின் உள்ளே ஆளுயர நடராஜர் சிலை சுதையமைப்பில் வர்ணம் பூசி அழகாகக் காட்சி அளிக்கும். கோவிலுக்கு உள்ளே செல்ல அவகாசம் இல்லாதவர்கள், புதுச்செருப்பு அணிந்து அதை வெளியில் விட பயப்படுபவர்கள் என்று பலபேர் சுந்தரியின் தற்காலிக பூ மேஜை முன் நின்று ஒரு கண்ணால் சுந்தரி அழகையும் மறு கண்ணால் நடராஜர் அழகையும் தரிசித்து நகர்வார்கள்.
சமயங்களில் சுந்தரி மேசை முன் பூக்குடலைகள் அவளை ரசிக்க விடாமல் தடுக்கும்.
அதற்காக எட்டிப் பார்க்க முடியுமா என்ன? வேறு வழியில்லாமல் பூ வாங்குகிற சாக்கில் அவளை விழுங்கி விட்டு செல்லும் கூட்டம் பெருகியது.
சிலர் வேறு உபாயம் கண்டனர்.
உள்ளே எங்கேயோ கோஷ்டத்தில் ஒளிந்து கொண்டு இருக்கும் பிள்ளையாரை மானசீகமாக தருவித்த தோப்புக்கரணம் போடுகிற சாக்கில் நடராஜருக்கு சம்பந்தமில்லாமல் தோப்புக்கரணம் போட்டு, சுந்தரி தரிசனம் பெற முனைந்தனர்.
நடராஜருக்கு தோப்புக்கரணம் போடும் கும்பல் அதிகமானதில், குறுக்கு சந்தின் முதல் வீட்டுக்காரர், சுந்தரி கடையை நோக்கினாற்போல் இருக்கும் தன் காம்பவுண்டில் சிறிது பிளந்து, பிறை போல அமைத்து அதில் பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்து, அவருக்கு “வழிப்பிறை பிள்ளையார்” என்று பெயரும் வைத்து விட்டார். இவர் காலப்போக்கில் பிரசித்தி பெற்று, பெயர் மருவி “வழிப்பறி பிள்ளையார்” ஆகிவிட்டார்.
இது உண்மையில் வழிப்பறி சுந்தரி விநாயகர் என்றுதான் ஆகி இருக்க வேண்டும்.
ஆக, பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் என்பது மாறி, தோப்புக்கரணத்திற்கு பிள்ளையார் என்பதாக முடிந்தது இந்த விளையாட்டு.
இப்போது இன்னமும் வசதியாகி விட்டது.
ஒரு கண்ணால் பிள்ளையாரும், இன்னொரு கண்ணால் நடராஜரையும் பார்த்தால் சுந்தரியைப் பார்க்க மூன்றாவது கண் தேவைப்பட்டது.
அது இயல்பாகவே சுந்தரியிடம் இருந்தது. இவ்வாறு பூ வாங்காமல் இலவச தரிசனம் செய்பவர் மேல் கரிசனம் காட்டாது நெற்றிக்கண்ணால் எரிக்க ஆரம்பித்தாள்.
அப்படியும் சில பேர், சாமர்த்தியமாக ஒரு காதை பிள்ளையாருக்கும் மற்றொன்றை நடராஜருக்கும் இரண்டு கண்களை சுந்தரிக்கும் அளித்து மகிழ்ந்தனர்.
சுந்தரிக்கு வியாபாரம் சூடு பிடித்தது போக, அதுவரை காற்று வாங்கிக் கொண்டு இருந்த விசுவநாதருக்கும் வியாபாரம் சூடு பிடித்தது.
சுந்தரி கையில் காசு புரள ஆரம்பித்தது. இந்த சாமர்த்தியங்கள் இல்லாத மற்ற ஓரிரண்டு பூக்காரப் பெண்மணிகள் தங்கள் விதிகளை நொந்து கொண்டனர்.
அதிலும் அவளிடம் இடம் பறி கொடுத்த மலர்விழி மிகவும் நொந்து போனாள். அவளுக்கு இயற்கையாகக் கிடைத்த கொடையான நீண்ட பற்கள் அவளது வியாபாரத்திற்கு பெரிய தடையாகின.
இந்த மாதிரி அழகு குறைந்த ஒருத்தியை பக்கத்தில் வைத்து இருப்பதில், பொதுவாகவே அழகான பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் அழகு இதன் மூலம் பன்மடங்கு உயரும் என்பதும் ஒரு காரணம்.
சுந்தரி பெரும்பாலான கையிருப்பை விதம் விதமான உடைகளிலும், நகாசு விஷயங்களிலும் செலவழித்தாள்.
தான் அழகாக இருக்கிறோம் என்பதை விட, தன் அழகால் உந்தப்பட்டு, தன்னைக் கடக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் படுகிற பாட்டை, அவள் ஆனந்தமாக அனுபவிக்க ஆரம்பித்தாள்.
தன்னைவிட அழகில் குறைந்த ஒருத்தியோடு ஓடிப்போன மணியை ஒவ்வொரு ஆண்மகனிடமும் கண்டு, அவர்களை, அவர்களது உணர்ச்சிகளாலேயே வீழ்த்துவதுதான் எவ்வளவு நன்றாக இருக்கிறது?
திங்கள் கிழமை. பிரதோஷம் வேறு.
சுந்தரி சமேத விசுவநாதர் களைகட்ட ஆரம்பித்தார்.
சுந்தரி வழக்கம் போல மகளோடு வந்து, கடையைப் பரத்தி வைக்கும் தருணம், மல்லிகா திடுமென்று நினைவிற்கு வந்தவளாக அவளது சக மாணவிகள் அப்போது வெளியாகி ஓட்டமாக ஓடிக்கொண்டு இருந்த ரஜினி படம் ஒன்றை பார்க்க இருப்பதாகவும், அதற்கு இருநூறு ரூபாய் வேண்டும் என்றும் கெஞ்சினாள்.
சுந்தரிக்கு தூக்கி வாரிப் போட்டது.
கையில் இருந்த காசையெல்லாம் போன வாரம் செலவழித்து விட்டாள்.
நீண்ட நாள் ஆசையான நிறைய சலங்கைகள் குலுங்கும் கொலுசு ஒன்றையும் வாங்கித் தனது அழகான கால்களில் அணிந்து கொண்டாள்.
மிச்சம் இருந்த காசுக்கு, உற்சாகமாக வழக்கத்திற்கு மாறாக நிறைய பூ வாங்கி வந்து தொடுக்க ஆரம்பிக்கும் போது, இந்த சனியன் சினிமா போகக் காசு கேட்கிறது.
பட்டென்று மல்லிகா மண்டையில் ஒரு தட்டு தட்ட, மல்லிகா காத்திருந்தது போல் உடைந்து அழ ஆரம்பித்தது.
அருகில் ஆளரவம் கேட்டது.
மலர்விழி இடத்தில் தட்டுத்தடுமாறி வந்த ஒரு கிழவி கையில் இருந்த மூட்டையை இறக்கி வைக்க முனைகிறாள்.
“ந்தே” என்று அதட்டல் போட்டாள் சுந்தரி.
கிழவியின் தோற்றம் அவளை பிச்சைக்காரி என்று நினைக்க வைத்தது.
அரதப் பழசான நூல் புடவை.
முடிந்த வரை சுற்றி இருந்தாள் கிழவி. இதற்கு மேல் இளைக்க இடம் இல்லாத உடல்.
மார்பும் முதுகும் ஒட்டிப்போய், கீழ் நடுத்தர குடும்பங்களின் மாதக் கடைசி கோல்கேட் பற்பசை ட்யூப் மாதிரி இருந்தாள்.
புதிதாக சமையல் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்ட ஆண்கள், தங்கள் புஜபலம் முழுக்க குழவியில் ஏற்றி, தரையோடு தரையாக தேய்த்து இட்ட சப்பாத்தி மாவு போல இருந்தது அவள் தோற்றம்.
கிழவி சுந்தரியின் அதட்டலைக் கேட்கவில்லை. அந்த இடத்தை சுத்தம் செய்ய முனைந்தாள்.
சுந்தரி வழக்கமான ஒரு கெட்ட வார்த்தையைப் பிரயோகித்து, “நான் சொல்லிக் கினே கீறேன்.. நீ பாட்டுல கந்தத் துணிய கவுத்து விடறே” என்று அவளது மூட்டையை எட்டி உதைக்க இருந்தவள், தன் காலை அந்தரத்தில் நிறுத்தினாள்.
அந்த மூட்டை நிறைய பூக்கள்.
“ஆரு ஆயா நீ? கடை போடறியா?”
“ஆமாம் கண்ணு”
“அதுக்கு இஸ்டப்பட்ட எட்த்துல கடை போடுவியா நீயி?. இது வேற ஒரு ஆளோட எடம்.. இதா இப்ப வந்துருவா… நீ எங்கியாச்சும் தள்ளிப் போயி குந்து”
“இல்லியே கண்ணு… மலரு காலைல என்னைய இட்டாந்து இந்த எடத்தைத் தானே காட்டிச்சு… அது ஊருக்குப் போவுதா…பத்துப் பதினஞ்சு நாள், என்னைய பாத்துக்க சொல்லி போச்சு”
சுந்தரிக்கும் ஞாபகம் வந்தது. போன வாரம் ஒருநாள் வெளியூர் போவதைப் பற்றி மலர்விழி தன்னிடம் பிரஸ்தாபித்து இருந்தாள்.
சுந்தரி கிழவியை மேலும் கீழும் பார்த்தாள். கிழவின்னா கிழவி,
ஒரிஜினல் அக்மார்க் கிழவி.
“இன்னா ஆயா. உனிக்கு இன்னா இரநூறு வயசு இருக்குமா?”
கிழவி கெக்கெக்கென்று சிரிக்க முடியாமல் சிரித்தாள்.
கறுத்த முகம், வயதின், சோகங்களின் மடிப்புகளின் ஊடே அவளது வாய், ஒற்றைப் பல் கூட இல்லாமல் சோகையாக இளித்தது.
“எம் புருசன் செத்தப்போ எனக்கு முப்பது வயசுன்னாங்க… காமராசர் செத்து ரெண்டு வருசம் களிச்சு எங்க ஊட்டுக்காரர் பட்டை சாராயம் குடிச்சு செத்துப் போனாரு…
அதுக்குள்ளாற நூறு வருசம் ஆயிருக்குமா இன்னா?”
கிழவி தட்டுத்தடுமாறி தன் உடமைகளை கீழே பரப்பி வைத்தாள். நிறைய உதிரிப் பூக்கள். நடுங்கும் விரல்களால் அவற்றைத் தொடுக்க ஆரம்பித்தாள்.
அப்போது தான் விசும்பிக் கொண்டு இருக்கும் மல்லிகாவைப் பார்த்தாள்.
“இன்னாத்துக்கு அளுவுது இது? அறியாப் புள்ளியா அட்ச்சியா இன்னா?”
“அடிக்காமக் கொஞ்சுவாங்களாக்கும்?
ரசினி படம் போவணுமாம்… கய்தேக்கு இருநூறு ரூவா வோணுமாம்.. அடுத்த வேளை சோத்துக்கே ஆலாப் பறக்கறாங்க.. இதுக்கு சினிமா கேக்குது சினிமா”. அவளது விரல்கள் அவளது மூங்கில் போன்ற கால்களில் கொலுசு சலங்கைகளை வருடி சப்தம் எழுப்பிக் கொண்டு இருந்தன.
கிழவி பதில் கூறவில்லை. முதுமையா அயர்ச்சியா தெரியவில்லை. பக்கத்தில் கிழவி இருப்பதும் நல்லது தான்.
இவளது இயலாமை தன் வியாபாரத்திற்கு உதவும்.
நினைத்தபடி எல்லாப் பூவும் விற்று விட்டால், தானும் மகளோடு இரவுக் காட்சிக்குப் போய்விடலாம்.
“எப்படிம்மா பூவு?”
ஆஹா.. முதல் போணி..
பார்த்தால் தோப்புக்கரணம் கோஷ்டி மாதிரி தெரியவில்லை. பூவைக் கொடுக்கும் போது கையை உரசிக் கொடுக்க வேண்டும். அப்புறம் குப்புற அடிக்குமா குட்டிக் கரணம் அடிக்குமா என்று பார்க்க வேண்டும் “
சொன்னாள்.
“அடேங்கப்பா… உனக்கும் சேத்து சொல்ற மாதிரி இருக்கு”
“பைசா வேணாம்னு சொன்னா என்னைய ஊட்டுக்குக் கூட்டிக்கினு போய்டறியா சாமி”
“ஐயய்யோ” என்றார் அவர் நிஜமாகவே பயந்து.
“ஒரு மொழம் குடும்மா” என்று ஜிப்பாவுக்குள் கை விட்டார் அவர்.
அதற்குள் அவர் மனைவி பிள்ளையாரோடு பேசிக் கொண்டு இருந்தவள் வந்து விட்டாள்.
அந்த மாதரசி நல்ல நிறத்தில் திடகாத்திரமாக இருந்தாள். வைரக் கம்மல்கள் அந்த மஞ்சள் நிற வெய்யிலில் டாலடித்தன. ஒரு இனம்புரியாத பணக்காரக் களை பெருத்த கர்வமாகப் பொங்கி வழிந்தது.
“இன்னா சாமி ஒரு மொழண்ற? ஊட்டம்மா கிண்ணுண்ணு கீறாங்க… ஒரு பந்து மல்லிப்பூவை சுருட்டி அம்மா தலைல சொருகுவியா… சிங்கிள் மொழம் கேக்குறே?”
அந்த அம்மாள் முகம் சிவந்தது.
“என்னோட தலை என்ன பேஸ்கட்பால் கூடையா? பந்தைத் திணிக்கறதுக்கு” என்றவள் கணவனிடம் ரகசியமாக,
“ஆளும் மூஞ்சியும் சரியாவே இல்லே… கரெக்டா சொல்லி வைச்ச மாதிரி எப்படித்தான் இங்கே வந்தீங்களோ” என்று கடிந்து கொண்டு, கிழவியிடம் தானே சென்று விலை பேசி நாலு முழம் வாங்கி விட்டாள்.
அவரால் ஒன்றும் சொல்ல முடியாமல், சுந்தரியின் புரியாத கெட்ட வார்த்தைகளை நாசூக்காக தவிர்த்து மனைவியுடன் கோவிலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.
ப்ரதோஷ காலம் நெருங்க நெருங்க மக்கள் சுந்தரியை நந்தி மாதிரி ரசித்து விட்டு, நடுங்கும் கைகளால் குத்து மதிப்பாக கட்டும் கிழவியை சிவனாக பாவித்து பூக்களை பெற்றுக் கொண்டு சாரிசாரியாக உள் சென்றனர்.
பூஜை முடிந்து ஆளரவம் குறைந்த நிலையில் சுந்தரியின் மேஜையில் பாதிக்கு மேல் பூ அப்படியே இருந்தது.
அன்றைக்கு அவளுடைய பிரத்யேகமான அலங்காரங்கள் எல்லாம் தர்ம தரிசனத்தில் வீணாகி விட்டன.
பக்கத்தில் சப்தம் கேட்டுத் திரும்ப, கிழவி, காலியான தன்னுடைய மூங்கில் தட்டைத் தட்டி, மூட்டையில் பணம் காசுகளை அள்ளிப் போட்டு மூடி, மிதமிஞ்சிய ப்ரயாசையுடன் எழுந்திருக்க முயற்சி செய்தாள்.
முடியவில்லை.
மல்லிகா துரிதமாக எழுந்து கிழவியை எழுப்பி விட்டு, அவளது மூட்டையையும் மூங்கில் கம்பையும் அவளிடம் அளித்தது.
என் பொண்ணு உசுரோட இருந்திருந்தா என் பேத்திக்கும் இந்த வயசுதான் இருந்திருக்கும். விசம் குடிச்சி செத்துட்டாளே பாவி… ஆருமே இல்லாத அனாதையா அல்லாரும் விட்டுட்டுப் போயிட்டாங்க… ஆயிசு இன்னாத்துக்குத்தான் நீளுதுன்னு தெரியலை” என்று நகர்ந்தாள்.
பின்னர் ஒருக்கணம் நிதானித்து தன் பையில் கைவிட்டு, நடுங்கும் விரல்களால் துழாவி, இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து மல்லிகாவிடம் கொடுத்தாள்.
ரசினி படம் பாரு தாயி.. பயவால்ல.. ஆனா படிக்கணும்..
நான் அந்தக் காலத்தில ஒரு வாத்தியார் படம் கூட விட மாட்டேன்.. ஆனா படிக்கலையே…
சாவும் வர மாட்டேங்குது… சாப்பாடும் கிடைக்க மாட்டேங்குது..
என்று தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தாள்.
சுந்தரிக்கு இப்பவும் குரல் எழும்பவில்லை.
“.
.
அரதப் பழசான நூல் புடவை.
ப
“தானே காட்டிச்சு… அது ஊருக்குப் “
“இன்னாத்துக்குக இது? அறியாப் புள்ளியா அட்ச்சியாஅப்போதுஇருக்கும் மல்லிகாவைப் பார்த்தாள். இன்னா?”
“அடிக்காமக் கொஞ்சுவாங்களாக்கும்?
ரசினி படம் போவணுமாம்… கய்தேக்கு இருநூறு ரூவா வோணுமாம்.. அடுத்த வேளை சோத்துக்கே ஆலாப் பறக்கறாங்க.. இதுக்கு சினிமா கேக்குது சினிமா”. அவளது விரல்கள் அவளது மூங்கில் போன்ற கால்களில் கொலுசு சலங்கைகளை வருடி சப்தம் எழுப்பிக் கொண்டு இருந்தன.
கிழவி பதில் கூறவில்லை. முதுமையா அயர்ச்சியா தெரியவில்லை. பக்கத்தில் கிழவி இருப்பதும் நல்லது தான்.
இவளது
“எப்படிம்மா பூவு?”
ஆஹா.. முதல் போணி..
பார்த்தால் தோப்புக்கரணம் கோஷ்டி மாதிரி தெரியவில்லை. பூவைக் கொடுக்கும் போது கையை உரசிக் கொடுக்க வேண்டும். அப்புறம் குப்புற அடிக்குமா குட்டிக் கரணம் அடிக்குமா என்று பார்க்க வேண்டும் “
சொன்னாள்.
“அடேங்கப்பா… உனக்கும் சேத்து சொல்ற மாதிரி இருக்கு”
“பைசா வேணாம்னு சொன்னா என்னைய ஊட்டுக்குக் கூட்டிக்கினு போய்டறியா சாமி”
“ஐயய்யோ” என்றார் அவர் நிஜமாகவே பயந்து.
“ஒரு மொழம் குடும்மா” என்று ஜிப்பாவுக்குள் கை விட்டார் அவர்.
அதற்குள் அவர் மனைவி பிள்ளையாரோடு பேசிக் கொண்டு இருந்தவள் வந்து விட்டாள்.
அந்த மாதரசி நல்ல நிறத்தில் திடகாத்திரமாக இருந்தாள். வைரக் கம்மல்கள் அந்த மஞ்சள் நிற வெய்யிலில் டாலடித்தன. ஒரு இனம்புரியாத பணக்காரக் களை பெருத்த கர்வமாகப் பொங்கி வழிந்தது.
“இன்னா சாமி ஒரு மொழண்ற? ஊட்டம்மா கிண்ணுண்ணு கீறாங்க… ஒரு பந்து மல்லிப்பூவை சுருட்டி அம்மா தலைல சொருகுவியா… சிங்கிள் மொழம் கேக்குறே?”
அந்த அம்மாள் முகம் சிவந்தது.
“என்னோட தலை என்ன பேஸ்கட்பால் கூடையா? பந்தைத் திணிக்கறதுக்கு” என்றவள் கணவனிடம் ரகசியமாக,
“ஆளும் மூஞ்சியும் சரியாவே இல்லே… கரெக்டா சொல்லி வைச்ச மாதிரி எப்படித்தான் இங்கே வந்தீங்களோ” என்று கடிந்து கொண்டு, கிழவியிடம் தானே சென்று விலை பேசி நாலு முழம் வாங்கி விட்டாள்.
அவரால் ஒன்றும் சொல்ல முடியாமல், சுந்தரியின் புரியாத கெட்ட வார்த்தைகளை நாசூக்காக தவிர்த்து மனைவியுடன் கோவிலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.
ப்ரதோஷ காலம் நெருங்க நெருங்க மக்கள் சுந்தரியை நந்தி மாதிரி ரசித்து விட்டு, நடுங்கும் கைகளால் குத்து மதிப்பாக கட்டும் கிழவியை சிவனாக பாவித்து பூக்களை பெற்றுக் கொண்டு சாரிசாரியாக உள் சென்றனர்.
பூஜை முடிந்து ஆளரவம் குறைந்த நிலையில் சுந்தரியின் மேஜையில் பாதிக்கு மேல் பூ அப்படியே இருந்தது.
அன்றைக்கு அவளுடைய பிரத்யேகமான அலங்காரங்கள் எல்லாம் தர்ம தரிசனத்தில் வீணாகி விட்டன.
பக்கத்தில் சப்தம் கேட்டுத் திரும்ப, கிழவி, காலியான தன்னுடைய மூங்கில் தட்டைத் தட்டி, மூட்டையில் பணம் காசுகளை அள்ளிப் போட்டு மூடி, மிதமிஞ்சிய ப்ரயாசையுடன் எழுந்திருக்க முயற்சி செய்தாள்.
முடியவில்லை.
மல்லிகா துரிதமாக எழுந்து கிழவியை எழுப்பி விட்டு, அவளது மூட்டையையும் மூங்கில் கம்பையும் அவளிடம் அளித்தது.
என் பொண்ணு உசுரோட இருந்திருந்தா என் பேத்திக்கும் இந்த வயசுதான் இருந்திருக்கும். விசம் குடிச்சி செத்துட்டாளே பாவி… ஆருமே இல்லாத அனாதையா அல்லாரும் விட்டுட்டுப் போயிட்டாங்க… ஆயிசு இன்னாத்துக்குத்தான் நீளுதுன்னு தெரியலை” என்று நகர்ந்தாள்.
பின்னர் ஒருக்கணம் நிதானித்து தன் பையில் கைவிட்டு, நடுங்கும் விரல்களால் துழாவி, இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து மல்லிகாவிடம் கொடுத்தாள்.
ரசினி படம் பாரு தாயி.. பயவால்ல.. ஆனா படிக்கணும்..
நான் அந்தக் காலத்தில ஒரு வாத்தியார் படம் கூட விட மாட்டேன்.. ஆனா படிக்கலையே…
சாவும் வர மாட்டேங்குது… சாப்பாடும் கிடைக்க மாட்டேங்குது..
என்று தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தாள்.
சுந்தரிக்கு இப்பவும் குரல் எழும்பவில்லை.
