
விருப்ப ஓய்வு
விக்கிக்கு
விடுதலை எனப்பட்டது.
அலாரம் எழுப்பும்
அன்றாட
அவஸ்தை இல்லை.
சோற்று மூட்டை சுமக்க வேண்டியதில்லை.
தன்னை விட
பத்து வயது குறைவான உயர் அதிகாரியை
எழுந்து நின்று
வணங்க வேண்டியதில்லை.
ஒருநாள்
விடுப்பிற்கு
ஒன்பது பொய்கள்
ஒப்பிக்க வேண்டியதில்லை.
நாளை முதல்
பிடித்தபோது எழுந்திருக்கலாம்
ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சி உறிஞ்சி
குடிக்கலாம்.
வீட்டுத்தோட்டத்து செடியை வாஞ்சையாய்
தடவி மகிழலாம் .
பக்கத்து வீட்டு
மனிதர்களின்
முகம் பார்த்து பேசலாம்.
விட்டுப்போன
உறவுகளை
வாட்ஸ்அப்லேனும்
பின் தொடரலாம்.
விருப்பப் பட்டியல்
பத்து நாட்களில்
சலித்துப் போயிற்று.
பேசாமல்
வேலையிருந்திருக்கலாம்
விக்கி
விருப்ப ஓய்வு பெற்றார்.
–

இக்கரைக்கு….
அருமை
Very true