அரிதாரம்/வசந்ததீபன்

அந்தி ரீங்கரிக்கிறது
மெல்லிய காற்று இசைக்கிறது
காதல் தவழ்கிறது
ஒரு நிமிடம் நில்லுங்கள்
உங்கள் தலையில் தீப்பிடித்திருக்கிறது
அணைக்காவிட்டால்
எரிந்து போவீர்கள்
நிலாக் காட்டினாள்
நட்சத்திரங்களைச் சுட்டினாள்
சோறு மட்டும் கேட்டது குழந்தை
பித்தளை விளக்கு வெண்கல விளக்கு
வெள்ளி விளக்கு தங்க விளக்கு
மண்அகல் மனதில் ஒளியேற்றும்
ஏவப்படுகிறது மிருகத்தனம்
கட்டவிழ்த்தப்படுகிறது வன்முறை
காண்கிறோம்…
கலைந்து செல்கிறோம்…..
மனசை எழுதுகிறேன்
சொற்களாக…
பூக்களாக…
நெருப்புத் துண்டங்களாக…
பொருட்படுத்தாமல் நீயும்
உன் வழி போகிறாய்
சிற்றலைகள் சுமந்து போகிறது நதி
பேரலைகளோடு
வரவேற்கிறது சமுத்ரம்
தீராத அலைகளோடு யாவரும்.

🦀