அவரது பயணம்/ எஸ் வி வேணுகோபாலன்

அவரது வாகனம்
அவரது பாதை
அவரது பயணம் அது

வழியில் அவர் திணறப் பார்த்து
அத்தனை அதிர்கிறது சமூகம்

தான் வந்த வழியை
அவர் மட்டுமே திரும்பிப் பார்க்க முடியும்
அந்த வலியை
அவர் மட்டுமே உணர முடியும்

கற்களும் முட்களும்
குண்டும் குழியும்
மேடும் பள்ளமும்
வாழ்க்கையை விடவா, சாலையில்

விரட்டப் பட்ட கால்கள்
ஓடி அடைய முடியாத தூரத்தை
ஒரு மிதி வண்டி எப்படி கடக்க…

தவிரவும்,
மனத்தின் அழுத்தம்
கால்களுக்கு வாய்க்கவில்லை
பெடல்களை மிதிக்க

எப்படியாவது தேவைக்கு ஈட்டத் தவித்தவர்
இரக்கம் சம்பாதிக்க
விரும்பி இருக்கப் போவதில்லை

இலக்கற்ற பயணத்தின்
எல்லைக் கோடு
மிதிப்பவருக்கும்
பிடிபடுவதில்லை.

              ****

3 Comments on “அவரது பயணம்/ எஸ் வி வேணுகோபாலன்”

  1. அருமை.
    அந்த வண்டி
    சக்கரங்களின் தடங்கள் இன்று பாதையானது.
    ஆனாலும்
    பயணம் எளிதாக இல்லை.

Comments are closed.