யோகி இன்றொரு சேதி -119/விசிறிசங்கர்

O

ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த ஒரு அன்பர். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பால ஜோதிடம் பத்திரிகையில் வித்வான் லட்சுமணன் அவர்கள் யோகியைக் குறித்து 1992-93 ல் எழுதி வந்த எழுத்துகள் மூலம் யோகியைப் பற்றித் தெரிந்து கொண்டவர்.

O

தமது குடும்பத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் யாரிடமும் கூறிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். நேராக திருவண்ணாமலை சென்றுள்ளார். யோகிக்கு பரிசளிக்க ஒரு போர்வை மட்டும் வாங்கிச் சென்றுள்ளார்.

O

சன்னிதித் தெரு இல்ல வாசலில் சென்று நின்றார். உள்ளே பஜனை நடந்து கொண்டிருந்தது. பத்து நிமிடம் கழித்து, உள்ளே அழைக்கப் பட்டார். உள்ளே சென்றதும், அங்கிருந்த ஒரு தட்டை எடுத்து போர்வையை வைத்து பகவானிடம் சமர்ப்பித்தார். பகவான் அதில் கையை வைத்து எடுத்துக் கொள் என்று சைகை காட்ட, போர்வையை எடுத்துக் கொண்டு அமர்ந்து பஜனையில் கரைந்தார்.

நெகிழ்ந்தார்.

O

அந்த நெகிழ்ச்சியில் எல்லா கோபங்களும் கரைந்தன. வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் மறைந்தது.

O

யோகி முன்னால் உட்கார்ந்திருந்த அந்த ஐந்து நிமிடத்தில், அவரது கருணைப் பார்வையில், எல்லா எதிர்மறை எண்ணங்களும் அகன்றன.

O

பகவான் சைகையால் போகலாம் என்று விடை கொடுத்தார்.

அருணாசலேஸ்வரர் கோவில் சென்று தரிசித்துவிட்டு வீடு திரும்பினார்.

O

குடும்த்தை விட்டுப் பிரிய நினைத்தவரை மீண்டும் குடும்பத்துடன் இணைத்து விட்டார் யோகி !

O

குடும்பத்தில் பக்தரை நிறுத்தினாய் போற்றி !

குடும்ப அறவாழ்வு வற்புறுத்தினாய் போற்றி !

என்னும் யோகி போற்றிபப் பாடல் இதைத்தான் வெளிப்படுத்துகிறது !