வவேசு
கொலுப் பொம்மைகள்
ஒன்றோடொன்று
சண்டையிட்டுக்
கொண்டிருந்தன.
நீயா நானா யார் பெரியவன்?
நீயா நானா யார் உரியவன்?
நீயா நானா யார் முன்னவன்?
நீயா நானா யார் பின்னவன்?
நீயா நானா யார் அழகன்?
நீயா நானா யார் அறிவன்”
உனதா எனதா எம்மொழி சிறந்தது?
உனதா எனதா எம்மொழி இறந்தது?
எம் குலம் உயர்ந்தது; உம் குலம் தாழ்ந்தது;
எம்மனோர் அன்பர்; உம்மனோர் கயவர்;
என்னிடம் இவ்விடம்; நீ போ வெளியிடம்;
என் குடி வாழும்; நின் குடி வீழும் !
சண்டை வலுத்துச் சச்சரவானது
பத்தாம் நாள்
மவுனமாயின
பெட்டிக்குள் வைத்துப்
பூட்டப்பட்ட பொம்மைகள்.
