எழுத்து: சி.சு.செல்லப்பா

நா. விச்வநாதன்

தன்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்பாத விசேஷகுணம் செல்லப்பாவிடம்இருந்தது.

என் எழுத்தைத் தூக்கித் தமிழ்உலகில் விட்டெறிந்துவிட்டேன் என் வேலை முடிந்தது என்ற செல்லப்பாவின் அதிகாரமிக்க போக்கு எழுத்துக் கலைஞனுக்கு அவசியமே.க.நா.சு இதை ஒருகுறையாகச் சொல்வார்.

எழுத்தே தவம்என்பது ஒருவிதமான மனப்பிறழ்வானநிலைதான்.இது மாசுமருவற்ற தன்மை.ஓர் ஆரம்பப்பள்ளி வாத்தியார்போன்றதோற்றம்.

ஒழுங்கற்ற தலைமுடி.கசங்கியகதர் ஜிப்பா,வேட்டி,ஒருமாத தாடி.தேசியம்காங்கிரஸ்,நல்ல எழுத்து என்ற சொல்லாடலோடு உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாத முகம்.நகரவாசியானாலும் பிறந்த வத்தலக்குண்டு நினைவுகளில் அல்லாடல்.காளைகளிடம் பிரேமை.கிராமிய மணத்தை சென்னையிலேயே உருவாக்கிக் கொண்டு எழுத்து இதழைக்கொண்டுவந்தார்.தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்கு எழுத்து உகந்ததாக இருந்தது.112 இதழ்கள் சாதனை.நடுத்தரக் குடும்பத்து விவகாரங்களைநேர்த்தியான சொற்களின் மூலம் சிறுகதைகளாக வரைந்தார்.தான் மோகித்தகாளைகளை “வாடிவாசல்”வழி உலவவிட்டார்.வெறும் எழுபது பக்கங்களில்மாடுபிடிக்கும் தமிழ்மரபை நுட்பமாகஅவதானித்து எழுதினார்.செல்லப்பாவிற்கு முன்னுதாரணங்கள் பிடிக்காது.பிற்கால மதிப்பீட்டிற்காகவோ பின்னால்புகழ்ந்து பேசவேண்டும்என்பதற்காகவோஎழுதுதல்கூடாது என்பது அவரது கட்சி.ஆரம்பவரிகளிலையே கதை பிடிபடவேண்டும் என்ற செல்லப்பா படைப்பாளி,தன் பார்வைக்கு ஏற்றதான வாழ்வைப்புதிருக்குள் அடக்கிவிடுவது அறியாச்செயல் என்றார்.

கு.ப.ராஜகோபாலனின்தாக்கத்தை செல்லப்பாவிடம் கண்டுபிடித்து விடலாம்.மார்க்சியத் தாக்கத்தால்”சமூக மாறுதலுக்கான இலக்கியம்”என்ற வாசகம் வற்புறுத்தப்பட்டது.அப்போது சரஸ்வதி இதழ் வந்துகொண்டிருந்தது.அழகியலுக்கும் சமூக சிந்தனைக்குமானவேறுபாடுகளைப் பேசினார்.புதிய வழித்தடம் என்ற சொற்களை முன்வைத்தார்.

ஐரோப்பிய இலக்கிய முறையை உள்வாங்கிக் கொண்டு “உருவமே முதல்”என்றுவாதிட்டார்.

அகிலன் நா.பார்த்தசாரதிமுதலானவர்களை கல்வியாளர்கள் தூக்கிப்பிடித்தபோது இரக்கமின்றி மறுத்தார்.

அவருடைய லட்சியம் “சுதந்திரதாகம்”என்ற பெரிய புதினத்தை எழுதுவதுதான்.

செல்லப்பா எழுதித்தோற்றதுஇதில்தான்.வறுமையை விலைக்குவாங்கும் வேலையை செல்லப்பா விரும்பியே செய்தார்.புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டுஊர்ஊராக அலைந்தார்.

பலன் பெரிதும்இல்லாவிட்டாலும் சோர்வின்றி நடந்தார்.’விளக்கு பரிசு’சாகித்ய அகாதமிபரிசுகிடைத்தபோது குறைந்தபட்ச கிளர்ச்சிகூட இல்லை.

சரசாவின் பொம்மை,மணல்வீடு,செய்த கணக்கு, பந்தயம், தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது,

தமிழில் இலக்கிய விமரிசனம் முதலானவை முக்கியமானவை.மனித மனதை யதார்த்தங்களிருந்து கற்பனை விளக்கங்களை நோக்கித் திருப்பிவிடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தார்.சென்னை திருவட்டீச்வரம் பேட்டை அவருடைய வீட்டிற்குப் போயிருந்தபோது அரியகாட்சி. ஒரு கட்டு கீரையைவைத்துக்கொண்டு கீரைக்காரியிடம்பேரம் பேசிக்கொண்டிருந்தார்.

பாதிக்குப்பாதிவிலை கேட்டுக்கொண்டிருந்தார்.இரண்டுரூபாய்க்கு கீரைக்காரியிடம்பேரம்பேசிய நபர் உலகத்திலேயே நம்செல்லப்பாவாகத்தான் இருக்கும்.

அக்னி அட்சரவிருது, சிந்து அறக்கட்டளை விருது தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகவிருது போன்ற சிறந்த விருதுகளை வேண்டாம் என்று மறுத்ததும் செல்லப்பாதான்.

செல்லப்பா இன்றிருந்தால் புத்தகக்கட்டுகளைத் தூக்கிக் கொண்டு படிப்படியாகஏறி இறங்கிக்கொண்டுதானிருப்பார் சலனமின்றி. ஏனென்றால் அவர் ஓர் உன்னதமான எழுத்து யோகி.