
அடர்வனத்தின் ஒற்றைக் கிளையில்
கூடடைந்த அந்தப் பறவை
உதிரும் சிறகுகளை
விழுங்கும் மௌனத்தினூடே
உற்றுப் பார்க்கிறது
அடுத்தொன்று முளைத்தலுக்கான
எச்சாத்தியப்பாடும் இருக்கப் போவதில்லை
மெதுவே கழிகிறது நிலவின் குளிர்மைகள்
கடந்த காலக் குறியீடுகளுக்குள்
கனவுகள் ஏதுமற்ற நிதர்சனம்
நிம்மதியின் தருணங்களாக
உணர்ந்த உந்துதலில்
சோகத்தின் மூட்டைகளை
சூரியனின் வெடித்த நாக்குகளுக்கு
இரையாக்கிய வண்ணம்
உத்வேகமாய் பறக்கிறது அந்தப் பறவை!

அன்பின் மனமார்ந்த நன்றிங்க ஐயா 💐🙏