பத்திரிகை செய்தி/அழகியசிங்கர்

அடக்கம் செய்ய காசில்லாததால் சிசு உடலை குப்பையில் வீசிய தந்தை

தந்தையால் குப்பை தொட்டியில் வீசப்பட்ட சிசு உடல், தன்னார்வல தொண்டு நிறுவனம் வாயிலாக நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி சி என் கே சாலையில் உள்ள குப்பை தொட்டியில் இருந்த சணல் பையை,நேற்று முன்தினம் இரவு நாய்கள் இழுத்து சென்றன. அதில் சிசு உடல் கிடந்தது.
தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீசார், உடலை மீட்டு ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில்
சணல் பையுடன் வந்த வாலிபர் குப்பை தொட்டியில் பையை வீசி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில், திருவல்லிக்கேணி கஸ்துாரிபாய் அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு, குறைபிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது தெரிய வந்தது. அந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா, 29,அவரது கணவர் தனுஷ், 33,
என தெரியவந்தது. அந்த சிசுவை, தனுஷ் குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.
அவரைபிடித்து விசாரித்தனர். இதில் தெரிய வந்தாவது:

தனுஷின் முதல் மனைவிக்கு குழந்தை பிறந்து இறந்தது. பின், மனைவியும் இறந்து விட்டார். திருட்டு வழக்கில் கைதான தனுஷ் ஜாமினில் வந்தார். இரண்டாவதாக கவிதாவை காதலித்து திருமணம் முடித்தார்.

அதன்பின் திருந்தி வாழ்ந்து வரும் அவர்,, கிடைக்கிற வேலையை செய்துள்ளார். இந்த நிலையில் கவிதா கர்ப்பம் அடைந்தார். ஆனால், குறைபிரசவத்தில் பிறந்த ,குழந்தை இறந்தது. அடக்கம் செய்ய காசில் லாததால் சிசு உடலை குப்பை தொட்டியில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறை மற்றும் தன்னார்வல தொண்டு நிறுவனம் வாயிலாக,கிருஷ்ணாம் பேட்டை இடுகாட்டில் சிசு உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.