🌷க.சோமசுந்தரி
கடந்து செல்லும்
நதியின் பயணத்தில்
நீரின் இசை ஒலிக் கேட்டு…?!
கல் மண்டபத்தின்
அத்தனை தூண்களும்
ஸ்தம்பித்து நிற்கின்றன!?
தீராத நேசத்தை
கண்களில் வழியும் பிரியங்கள் எப்போதும்
காட்டிக் கொடுத்து விடுகின்றன!
சொற்கள் தேவையில்லை
கரையில் காத்திருக்கும்
மௌனங்களுக்கு புரிந்து விடுகிறது!
கடும் கோடையிலும்
காய்ந்தமணல் பரப்பிலும்
அசையா நம்பிக்கையாய்
நிறம் மாறாமல் நிற்கும்
இந்த மண்டபங்கள்?!
எல்லா ஊர்களிலும்
யாரோ சொல்லாத
ஒரு நேசத்தை உணர்த்திவிட்டே செல்கின்றன.
இளைப்பாறுதலின் மீச்சிறு நேரங்களில்
இதில் அமரும் ஒரு பொழுதில்…?!
முகத்தில் படும் இளம் காற்றின் மொழியில்…?!
மனம் மட்டும் எப்போதும்…!
தொலைத்த ஏதோ ஒன்றை பெறுவதாக
நினைக்கிறது?!
பெரிதாக ஒன்றுமில்லை
ஆனாலும்…
இந்த மண்டபத்தின் தூணாக…?
ஒருநாள் முழுவதும்
நிசப்தமாய் நிற்பதில் தான்
எத்தனை ஆசை ?
