பெர்னாண்டோ பெசொவா/நான்

தமிழில் : க. மோகனரங்கன்


நான் எதுவுமில்லை.
நான் எதுவொன்றுமாக
ஆகப்போவதில்லை.
நான் எதுவொன்றுமாக
ஆகப்போவதைப் பற்றி ஆசைப்படக்கூட இல்லை.
இதையெல்லாம் விடுத்து
நான்,
என்னுள்ளாகக் கொண்டிருக்கிறேன்
இந்த உலகத்துக் கனவுகளையெல்லாம்.