கண்ணன் பிறப்பு/பி. ஆர். கிரிஜா

கண்ணா மணிவண்ணா
கார்மேகக்
குழலோனே
உன் அழகு மேனியை
மனதினில்
அணைக்கயிலே
அளவிலா உவகை
அடைந்திட்டேன் நான்
கண்ணன் பிறப்பென்று ஊரே
உனை இன்று
கொண்டாடி
மகிழ்கிறதே!
நெய் அப்பமும், தேன்குழலும்,
சீடையும், தட்டையும்
ஆனந்தம் தருமோ !
உனை மறந்தாலன்றோ
நினைப்பதற்கு
ஆலிலை அமுதே !
எண்ணமதிலே
நீக்கமற நிறைந்திருக்கும்
நீலமேக சியாமளனே !
இவ்வையகத்தைக்
காப்பாய்
வைகுண்ட வாசனே!


One Comment on “கண்ணன் பிறப்பு/பி. ஆர். கிரிஜா”

Comments are closed.