விருட்சம் 120வது இதழ் 100 கிராமுக்குள் வெளிவந்து விட்டது/அழகியசிங்கர்

இன்று கிருஷ்ண ஜெயந்தி. பண்டிகைத் தினத்தில் நவீன விருட்சம் 120வது இதழ் வெளிவந்து விட்டது. 100 கிராமுக்குள்தான் இந்த இதழ் இருக்கும்.

ஒரு விதத்தில் பார்க்கும்போது ரொம்ப சுலபமாக இதழை; கொண்டு வந்துவிடலாம் போல் தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லை.

நான் ஒருவனே போராடுவதால் அவ்வளவு சுலபம் இல்லை.

ஏப்ரல் மாதத்தில் சிக்கலான கண் அறுவைச் சிகிச்சையில் 2 மாதங்களுக்கு மேல் புத்தகம் படிக்காமலிருந்தேன்.

பழையபடி விருட்சம் வர ஆரம்பித்துவிட்டது. 80 பக்கங்கள்தான். ஆனால் அதைப் பார்க்கும்போது அப்படித் தெரியாது. மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறது. அட்டை ஓவியம் ஆறு வயது நிரம்பிய என் பேத்தி ஆரபி. அமெரிக்காவில் வசிக்கிறாள்.

அரசாங்க உத்தரவால் 450 நூலகங்களுக்கு விருட்சம் போகப் போகிறது. கூடவே 200 சந்தாதாரர்களாவது இருப்பார்கள். இது போதும்.

ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கும் விருட்சம் தீபாவளி மலர் தயாரிக்க வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது.

200 பக்கங்களுக்கு விருட்சம் கொண்டு வரும் அளவிலே விருட்சம் தீபாவளி மலர் கொண்டு வந்து விடலாம். யாராவது விளம்பரம் கொடுத்தால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் போகட்டும்.

விருட்சம் தீபாவளி மலர் தனி, விருட்சம் ரெகுலர் இதழ் தனி.

விருட்சம் தீபாவளி மலர் தயாரிக்க ஒரு தனிப்படையை உருவாக்க எண்ணம்.

இப்போது 120வது இதழை அலங்கரித்தவர்களின் லிஸ்ட் இதோ:

1. தமிழவன் 2. கிரிதரன் நவரத்னம் 3. மீ.விஸ்வநாதன்

4. எஸ்ஸர்சி 5. எம்.டி முகத்துக்குமாரசாமி 6. சுரேஷ் கண்ணன்

7. ந.பானுமதி 8. அழகியசிங்கர் 9.ஸிந்துஜா 10.ஜெ.பாஸ்கரன்

11. நெல்û நெல்லை சு. சோமசுந்தரி 12. கடற்கரை மத்த விலாச அங்கதம் 13. நாஞ்சில் நாடன்

14. எஸ்.வைத்தியநாதன்.

படைப்பாளிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

May be art of text that says 'நவீன விருடசம் தனி இதழ் நன்கொடை 40/- 120 வது இதழ் (ஆகஸ்ட் 2022ல் வெளிவந்துள்ளது) ஆசிரியர் வெளியீட்டாளர்: அழகிய சிங்கர்'

1Chandramouli Azhagiyasingar

2 Comments on “விருட்சம் 120வது இதழ் 100 கிராமுக்குள் வெளிவந்து விட்டது/அழகியசிங்கர்”

  1. வாழ்த்துக்கள்!
    விருட்சம் வாழ்க பல்லாண்டு!

    வேண்டியவர்களுக்கு
    மட்டும்தான் அனுப்பி வைக்கப்படும் போலிருக்கிறது. மற்றவர்களுக்கு, அவர்களுக்கு
    விலை தெரிவிக்கப்படும்
    பக்கத்தில், ‘செக்’கோடு
    தயாராக இருந்தால் கூட
    அனுப்ப இயலாதென்று
    அனுமானம் செய்து கொள்ளலாமா?

Comments are closed.