
நான் உயர் கல்வி
பெற்றவளல்ல
வெளியே பணி செய்து ஊதியம் பெறுவதில்
எனக்கு என்றுமே ஆர்வமிருந்ததில்லை
நன்றாக சமைப்பேன்
சினிமாப் பாட்டு கேட்பேன்
இணையத்தில்
சினிமா பார்ப்பேன்
நல்ல கணவர்
தொழிலாளர் சங்கத் தலைவர்
ஏற்றத்தாழ்வை
பொறுக்காதவர்
எனக்கு பெண்ணியம் கற்றுக் கொடுத்த
ஆசான்
கற்றுக் கொண்டு விட்டேன்
ஆனால்
ஏனோ அவர் முன் போல்
மகிழ்ச்சியுடன்
இல்லாததுபோல்
தோன்றுகிறது
