சாவு/க.நா.சு 

சாவு நிகழும் போது அதைக் கண்டவர்கள் எல்லோரும்

துக்கம் தான் படுவார்கள் என்று நிச்சயமாகச் சொல்லி

விட முடியாது. ஒருவன் செத்தது பற்றி – போய்

விட்டானா பாவம் என்று உரக்கச் சொல்லி அழுகுரல்

எழுப்பினாலுங் கூட உண்மையில் அந்தரங்கத்தில்

சிலரைப் பற்றி அவன் போய்விட்டானா, நல்லது

என்ற எண்ணம் ஏற்படுவதும் உண்டு என்றுதான்

தெரிகிறது. ஒருவன் செத்ததைக் கொண்டாட

அதிகம் பேர் அகப்படாவிட்டாலும் ஒருவனாவது

அகப்படுவான் என்று தான் தோன்றுகிறது.

சாவு என்கிற செய்தி கேட்டு துக்கமோ இன்பமோ

அடையாமல் இருப்பது தான் லக்ஷியம்

 என்றும்

சொல்வதற்கில்லை. குழந்தை பிறக்கும் போது

துயர் நிறைந்த உலகில் வந்து பிறந்து விட்டாயே

என்று அழுவதும், மனிதன் சாகும் போது துயர்மண்டிய

 உலகை விட்டுப் போனாயே என்று

மகிழ்ச்சியடைவதும் இஸ்லாமியர் பழக்கம்

என்று சொல்கிறார்கள். எனக்கு நிச்சயமாகத்

தெரியவில்லை. இதெல்லாம் அறிவு முறை

அல்லது பகுத்தறிவு முறையில் நடக்கிற

காரியங்களாக என்றும் இருந்ததில்லை.

அழுவதும் சிரிப்பதும் கூட வெற்றிலை போடுவது

பத்திரிகை படிப்பது போலப் பழக்கத்தினால்

வருகிற காரியங்கள் ஆகிவிட்டன.மனிதக்குலம்

 ஓரளவுக்கும் அதிகமாக

நீடித்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது Sex,

மதம், சித்தனை எல்லாமே அசட்டுப்

பழக்கமாகத் தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து

வந்து மனிதன் சிந்தனையை மாய்க்கிறது

தொல்லை தருகிறது. வாழ்க்கையென்று

பழக்க வேகத்தில் வாழ்ந்து விட்டுப்

போய்விடுகிறான் என்று தான் சொல்ல வேண்டும்புதுவாழ்வு

 வாழப் புரட்சி என்பது

பழக்கங்கள் அற்றுப் போகச் செய்யும்

வழியிலே தொடங்க வேண்டும் ஒவ்வொரு

சிசுவும் புதுப்புது வழிகளில் உதயமாகி

உயிர்பெற்று உலகில் தோன்றி வாழ வேண்டும்.