மன்றாடல்/அதிரன்

தரிசனம் முடிந்து
பிரகாரத்தில் வந்தமர்ந்தவன் மடியில்
தன் தந்தை
என்று தவறி வந்து
இளைப்பாறுகிறாள்
சிறுமி ஒருவள்
சற்றைக்கெல்லாம் உண்மை
அறிய….. மடிவிட்டு மறைகிறாள்
அந்த கன நேரம் இட்டுச்சென்ற ஸ்பரிசமோ
அவன் மடிவிட்டு மறைய
மன்றாடுகிறது வெகுநேரமாய்…..