
பேருந்து பயணிக்கும் திசைகளில் எல்லாம் தென்றல்கூடவருகிறது.
கடந்துசெல்லும் விழிகள் யாவும்
திகைத்து நின்றே கடக்கின்றன.
நடத்துனர் இன்று அதிகமாகவே
உள்ளே நடையாய் நடக்கிறார்…
ஓட்டுநர் கவனம் சிதறிவிடுமோ
கவலையில் அறுபதைக்கடந்தவர்கள்.
பேருந்துநிறுத்தங்களில் எல்லாம்
பெருமூச்சுகள் பேருந்துபின்னே
அலைபாய்ந்து ஓய்கின்றன.
உடன்வயதுப்பெண்களின் பொறாமைத்தீப் பார்வையை அவள் புன்னகைதான் தணிக்கிறது.
காலமெல்லாம் இப்பயணம் நீண்டுவிடாதயென்று வாலிபங்கள் ஏங்கித்தவிக்கின்றன.
அலைபேசி மேயும் தலைகளெல்லாம் கள்ளப்பார்வையைக் கடத்தியபடி
வருகின்றன.
பேருந்துஒன்றுதான் பெரும்பேரைச் சுமந்ததாய்
♦அனங்கன்j
