தமிழில் : க.மோகனரங்கன்

விசிலூதியபடி
என்னை நோக்கி ஓடிவந்த
மூன்று சிறுவர்கள்,
‘உன்னைக் கைது செய்கிறோம்
நீ ஒரு குடிகாரன்!’
என்று கூச்சலிட்டதோடு,
தங்களுடைய பொம்மை ஆயுதங்களால்
என்னைக் காலில்
தாக்கவும் தொடங்கினர்.
ஒருவன் காவல்துறை சின்னம் அணிந்திருந்தான்;
இன்னொருவனிடம் கைவிலங்கு இருந்தது.
ஆனால் , என் கைகளோ
அகப்படாத உயரத்திலிருந்தது.
நான் மதுக்கடையினுள் நுழையும்போது,
வெளியே அவர்கள்
கூட்டினின்றும் துரத்தப்பட்ட ஈக்களைப் போல
சுற்றிவந்தார்கள்.
நான்
ஒரு போத்தல் மலிவான விஸ்கியும்
மூன்று இனிப்பு மிட்டாய் பட்டைகளும்
வாங்கினேன்.
