மாற்றம்/அழகியசிங்கர்

ரேடியோ
வந்த சமயத்தில்
ரேடியோவைக் கேட்காதீர்கள்
என்றார்கள்

சினிமா
நுழைந்தபோது
பாதகம் நடந்தது போல்
பதைபதைத்தார்கள்
பிறகு சகஜமானார்கள்

டீவி
நம் வாழ்க்கையின்
அங்கத்தினன் ஆனபின்
கொலைக் குற்றம்
நடந்ததுபோல் பார்த்தார்கள்

இப்போதோ கையில்
வைத்திருக்கும்
ஸ்மார்ட் போனுடன்
ஒவ்வொருவரும்
குடும்பம் நடத்துகிறார்கள்


எல்லாம் மாற்றங்களும்
ஏற்றுக்கொண்டு
நாம் வாழப்
பழக வேண்டும்


(கணேஷ்ராமிற்கு)