
அழுந்தி வேதனையை அடக்கி
வெடித்துப்பீறிடும் அழுகையின் வலி
ஆத்மாவின் வெளிப்பாடாகிவிட ஏனோ வலி
மிகுந்த வேதனைகள் வேதாந்த
நிர்மலங்களை விதைக்கத்தான்
விக்கித்தவிக்கிறது.
வலியின் பெருந்துயரம் அடங்கும்
வேளை வார்த்தைகளற்று காற்று
வெளியேறிய
பந்தாய் அமைதியாவது
சாத்தியமாகிறது உடலுக்கும்
மனதுக்கும் தான்.
மனமெனும் மென்பொருள்
அடிவாங்கும் ஒரு வேதனை
முடக்கத்தில் வலி எப்போதும்
துன்பமாகிப்போனாலும்
எதையாவது பிரசவிக்கும்
ஜனன நிகழ்வில் துயரம்
மாற்றியமைக்கப்பட்டு சுகமான
வலியாகலாம்.
வல்லமைகள் வலியை
மருந்தாக்கும் அதிசயத்தை
வாழ்க்கை நடத்தித்தான்
காண்பிக்கிறது.
