பானுமதி ந
கடல் கூட ஓய்வு கொள்ளும்
உன் பேச்சுக்கள் ஓயாது ஒலிக்கும்
இமை மூட மறுத்து கொஞ்சிப்
பார்க்கும் கண்களில்
நெருக்கத்தின் காற்று சுவாசிக்கும்
என் உயிரில் எழுதிய உன் பெயரை
எதற்காக அழித்துப் போனாய் என் தோழி?
இனியும் அரற்றும் மனதும் திரளும்
நீரும் உன்னிடம் மட்டுமே பேசுமாம்
எங்கோ இருக்கும் என் தோழி
