
பூபாளம் இசைக்க புலறும் விடியலுக்கு புதிர் போட்டு பார்த்தது
யாராயிருக்கும்?
விடிகின்ற வானம் விதவிதமாய் வேடிக்கைக்காட்ட
வித்தைக்கற்றது யாரிடமோ?
வண்ண வண்ண ஜாலங்கள் வழிந்தோட வானத்து வழியெல்லாம்
வகிடெடுத்து வரப்பு கட்டியது யார்?
பூக்கச்சொல்லி பூக்களிடம் பூடகமாய் புன்னகையைத்தந்தது
யாரோ?
புதிதாய் புலரும் பூமிக்கு புன்னகை வீசச்சொல்லி பூச்சொரிந்தது
யாராயிருக்கும்?
காலை வானில் கதைகதையாய் கரைந்து போக காகத்தின்
காதுகளில் கிசுகிசுத்தது யாரோ?
கதிர்களை காலையில் விரிக்கச்சொல்லி கதிரவனுக்கு
கட்டளளையிட்டது யாரோ?
யாரென்றும் தெரியாமல் யாதொன்றும் அறியாமல் விடை தேடி
அலைகின்றோம்
விழித்தபடி தொலைகின்றோம்.
