
சித்தி கணபதி வருக வருக புத்தி கணபதி வருக வருக சக்தி கணபதி வருக வருக பக்தி நெறி தர வருக வல்லபை கணபதி வருக வருக அல்லவை களைவோய் வருக வருக நல்லவை தரும் குணநிதியே வருக இல்லைஎனா தருள் இறையே வருக கோலாகல நவமணியே வருக ஆலகாலசிவ பாலா வருக சூலாயுத சக்தி மைந்தா வருக மாலோலன் மருகா வருக பாரதம் எழுதிய மூலா வருக நாரதர் கைக்கனி கொண்டோய் வருக சோதரன் திருமண காரணா வருக ஆதார சக்தியே அன்பொடு வருக எருக்கணி இறைவா வருக வருக திருக்கயிலை சிவநேசா வருக மறுப்பிலாதருளும் மேலோய் வருக விருப்பொடு பணிந்தோம் விரைவாய் வருக
.

நன்றி ஐயா. விநாயகர் திருவருள் பரிபூரணமாக வழங்குவார்.
விநாயகருக்கு அற்புத
பாமாலை