
மூத்த மகனே
முதன்மை கடவுளே
ஐங்கரனே
அனைத்தையும் காப்பவனே
பார்வதியின் மகனே
பாச கஜ முகனே
சிவனுக்கு வரமாய் வந்தாய்
சிங்கார வேலனுடன் உதிரம் பகிர்ந்தாய்
சித்தி முத்தியிடம் உன் சித்து விளையாட்டை அறிய வேண்டும்
உன் தொந்தியின் அழகை காண கண் கோடி வேண்டும்
சுபன் லாபனின் தந்தையே
எனை காக்கும் விந்தையே
தினமும் படிப்பேன் உன் துதி
ஆயுள் முழுதும் நீயே என் கதி
