‘கருவளையும் கையும்’/ கு.ப.ரா.கவிதைகள்/பெருமாள் முருகன்

ஏழெட்டாண்டு உழைப்பை எடுத்துக்கொண்டு இன்று (30-08-22) என் அலமாரிக்கு வந்து சேர்ந்திருக்கும் நூல்.

‘கருவளையும் கையும்’
கு.ப.ரா.கவிதைகள்.

கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும் கையும்’ என்னும் தலைப்பில் நூல் வெளியிடவும் இயலவில்லை. அந்நூல் வெளியாகியிருந்தால் புதுக்கவிதை வரலாற்றில் அதுதான் முதல் நூலாக அமைந்திருக்கக்கூடும். எனினும் புதுக்கவிதை வரலாறு அனைத்திலும் ந.பிச்சமூர்த்தியோடு இணைத்துக் கு.ப.ரா.வும் முன்னோடியாகப் பேசப்படுகிறார் என்பது மட்டுமே மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக வல்லிக்கண்ணன் தம் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் கு.ப.ரா.வுக்கு உரிய இடம் வழங்கி விரிவாக எழுதியுள்ளார். எனினும் கு.ப.ரா.வின் கவிதைப் பங்களிப்பைக் குறித்துக் குறைப்பார்வைகளே பொதுவில் நிலவி வருகின்றன.

  • பதிப்புரையில்.