
1
வினாடிகள் இரைச்சலாய்க்
கடந்து செல்ல மெது மெதுவே
மணி ஊர்கிறது நேரமாய்.
2
ஒளிரும் பால் நிலா
மோனத்தில் ஒற்றைப் பாறை
காற்றிசைக்கும் காடு
3
உன்னைக் கவ்வினேன் என்றது இரவு
உன்னைத் துப்பினேன் என்றது பகல்
உறக்கத்தில் இன்னமும் கடவுள்.
4
இதுதான் சரி என்றான் அவன்
அதுதான் சரி என்றாள் அவள்
சரிதான், சரிதான் என்றது குழந்தை
5
கொள்ளையாய்ப் பூத்திருக்கிறேன்
பறித்துக் கொள் கொஞ்சமாக
மொட்டுக்களை மட்டுமாவது விட்டுவிட்டு.

வினாடிகளின் விரைவும் மணியின் மெள்ளப் போதலும் சிறப்பு.
நிலா, பாறை, காற்று எல்லாம் சேர்ந்த காடு. இயற்கையைக் கண்முன் காட்டும் கவிதை