விடாமல் பெய்யும் மழை/குகா

ஒரு நாள் மதிய வேளையில் தூங்கி கொண்டிருந்தேன்.திடீரென்று கொட்டிய மழை என்னை எழுப்பி ஓடி சென்று பார்க்க வைத்தது.
மழை சொன்னது கப்பல் விட காகிதம் கொண்டு வா என்று.
மற்றொரு நாள் அதே மதியம். அதே மழை. அதே போல் ஓடி சென்று பார்க்க வைத்தது. இம்முறை மிளகாய் காயுது சீக்கிரம் ஓடு என்று.
அப்போது வயது 7
இப்போது வயது 27
அவ்வளவே

மழை நின்ற பின்னும்

மண் வாசனை இருந்து

கொண்டிருந்தது

           குகா