சில்க் ஸ்மிதா நேர்காணலில்

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் நான் ஒரு விளம்பர சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. எம்.எஸ்.வி யின் குடும்பம் எங்களுடன் வந்தது. நான் பல படங்களில் நடித்திருந்தாலும், அடிப்படையில் நான் ஒரு கூச்ச சுபாவமுள்ளவள். நான் மக்களுடன் உரையாற்ற வேண்டியிருக்கும் போது நான் பதற்றமடைகிறேன். நான் நிறைய பேருக்கு முன் நடனமாட வேண்டுமானால் எனக்கு மேடையில் ஏற பயம் உருவாகிறது. ’நான் நடனமாடக் கேட்க மாட்டேன்’ என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே எம்.எஸ்.வி அவர்களின் அமைப்புடன் வர ஒப்புக்கொண்டேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு விழாவில், பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய பொழுது, நான் ’நமஸ்காரம்’ என்று கூறிவிட்டு மேடையை விட்டு வெளியேறினேன், ஆனால் மக்கள் என்னை ஆட வேண்டும் என்று கூச்சலிட ஆரம்பித்தனர். அன்று என்னை காவல்துறையினர் பாதுகாப்பாக அறைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் எம்.எஸ்.வி, என் அறைக்கு வந்து என்னிடம் சொன்னார், நான் அவர்களுக்கு முன் நடனமாடாவிட்டால் எனது ரசிகர்கள் நிகழ்ச்சியை தொடர விடமாட்டார்கள். அவர் என்னிடம் நடனமாடும்படிக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். அடுத்த நாள், என்னிடம் கூட சொல்லாமல் தனியாக விட்டுவிட்டு எம்.எஸ்.வி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவுக்குப் புறப்பட்டனர், எம்.எஸ்.வி போன்ற ஒரு மூத்த, மரியாதைக்குரிய நபரின் செயலில் இது மிகவும் பொறுப்பற்ற நடத்தை என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணை தனியாக ஒரு புதிய நாட்டில் விட்டு விட்டார்கள். எப்படியாவது எனது பாஸ்போர்ட்டைத் திருப்பித் தருமாறு பயணத்தின் அமைப்பாளர்களை வற்புறுத்தினேன், நானும் மெட்ராஸுக்கு பறந்தேன்.

விமான நிலையத்தில், (customs )சுங்கத்துறை அதிகாரிகளால் நான் சோதனைக்கு உள்ளானேன். எனக்காக நான் கொண்டு வந்த சில பொருட்களுக்கு நான் ஒரு சிறிய தொகையை செலுத்த வேண்டியிருந்தது. பின்னர் தான் சில மேல் அதிகாரிகள் என்னைச் சோதனையிட வருகிறார்கள். அவர்களில் ஆறு பேர் சிபிஐயிலிருந்து வந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எனது உடைமைகள் எல்லாவற்றையும் தேடி, பின்னர் மன்னிப்பு கேட்டு வெளியேறினர். நான் எதையாவது கடத்துகிறேன் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்ததாக அவர்கள் கூறினர். இதுபோன்ற தகவல்களை யார் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பதும் எனக்குத் தெரியவில்லை.