
ஒரு பயணி வயல்களின் வழியே பயணித்துக்கொண்டிருந்தபோது புலி ஒன்று எதிரில் வந்தது. அவன் தப்பியோட, புலி துரத்தியது. ஓர் உயர்ந்த பாறையின் உச்சிக்கு வந்த பயணி, அதன் விளிம்பிலிருந்து தாவி எதிரே இருந்த காட்டுக் கொடியைப் பிடித்துக்கொண்டு தொங்கினான். அவன் தலைக்கு மேலே புலி நின்று உறுமியது. அவனுக்குக் கீழே இன்னொரு புலி அவனை சாப்பிடக் காத்திருந்தது. அந்தக் கொடி மட்டுமே அவனைத் தாங்கியது. இரு சுண்டெலிகள் அந்தக் கொடியை மெல்லக் கடித்துத் தின்னத் தொடங்கின. அப்போது தன் கையருகே ஒரு ஸ்ட்ராபெரிப் பழம் தொங்கிக்கொண்டிருந்ததை அவன் பார்த்தான். கொடியை ஒரு கையால் பிடித்துத் தொங்கியபடி இன்னொரு கையால் ஸ்ட்ராபெரியைப் பறித்துத் தின்றான். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!
