விக்கிரமாதித்யன் கவிதை

நடக்கும்
நடக்காதென்று சொல்ல
நான் யார்

வேண்டும்
வேண்டாமென்று நினைக்கத்தான்
நான் யார்

நன்மை
தீமையென யோசிக்க
நான் யார்

உண்மை
பொய்மையென கருதத்தான்
நான் யார்

பூமிபோல
இருக்கவேண்டியதுதான் சாமி