முன்னொரு காலத்திலே/அசித்தன்

யாருமற்ற இடத்தில்
சலனமற்ற ஸ்படிக
நீர்நிலை ஒன்று
நன்னீர் நிரம்பியது
கரையெங்கும்
மரங்கள் செடிகள்
பூக்கள் கனிகள் பறவைகள்…
தத்தம் இயல்பினில்

வழிப்போக்கன் ஒருவன்
அவனை ஈர்த்தது
ஆச்சர்யமும் மகிழ்ச்சியமாய்

கனிகள் உண்டான்
பூக்களை சுவாசித்தான்
பறவைகளின் குரல்களை எதிரொலித்தான்
மோனநிலை அவனுள்

நீரில்தனில்
இறங்கினான்
அவனறிந்த ஒழுங்கின்றி
அமைந்த விளிம்பு ஆழமும்

தவறி விழுந்தான்
பலத்த அடி
மோனம் கலைந்தது
வலியும் வேதனையுமாய்

உரத்த குரலில் கடுசொல்லும்
சாபமுமாய்
இடம் நீங்கினான்

அன்று எழுந்த அலைகள்
இன்னும் அடங்கவில்லை

One Comment on “முன்னொரு காலத்திலே/அசித்தன்”

Comments are closed.