
மழலையின்
சிரிப்பொலியில்
மனது நன்றாய்
குதூகலிக்க !
வெண் பஞ்சை
விரித்தாற் போல்
சீருடையில் சிறார்கள் !
காலை வேளை
இள வெயிலில்
கடவுள் வாழ்த்து
பாடிட!
ஆலய மணி போல்
தினமும் வகுப்பு
மணி ஒலித்திட
அன்பின் வடிவம்
ஆசிரியர் புன்னகை
அழகாய் பூத்திட!
அன்றைய தினம்
வகுப்பு வெகு சிறப்பாய் நடந்திட !
பிள்ளைகளின்
துள்ளல் நடை
மைதானத்தில்
கேட்டிடவே !
விளையாட்டு ஆசிரியர் விளையாடிக்
காட்டிட !
பிள்ளைகளின்
மகிழ்ச்சி என்றும்
பொங்குமிடம்
எங்கள் அழகான
பள்ளிக்கூடம் !ஸ்ரீ
