இனிக்கும் தமிழ் – 140/டி வி ராதாகிருஷ்ணன்

விவேக சிந்தாமணி

பாடல்
”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே!”

பொருள்;
தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும்
தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை . ஆனால் வண்டானது காடுகளுக்குள் இருந்த
போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து மது உண்ணும். அது போல பல
காலங்கள் பழகி வந்தாலும் அறியாமையில் உள்ளவரகள் கற்றவர்களின் பெருமை
அறியாதவர்கள் . ஆனால் அறிவுடைய கற்றவர்களோ தூர இருந்த போதும்
கற்றவர்களின் சிறப்பினைக் கண்டு நாடி வந்து உறவாடி மகிழ்வர்.