யோகி இன்றொரு சேதி -124/விசிறி குமார்


O
யோகி தமது பள்ளிப் பருவத்தில் இரண்டு முறை சுவாமி விவேகானந்தரின் குரலை கேட்டுள்ளார். இந்த அரிய செய்தியை அன்னை மாதேவகி அவர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
O
” இப்போது நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட மேம்பட்ட வாழ்க்கை ஒன்று காத்திருக்கிறது வா! ” என்னும் அழைப்பாக அது இருந்திருக்கிறது.
O
பின்னாளில் 1947 ல் முதன் முதலாக புதுவை அரவிந்தாஸ்ரமம் சென்ற போது , சராசரி மனித வாழ்வை விட மேம்பட்ட வாழ்வொன்று சாத்தியமே என்பதை உணர்ந்ததாக ட்ரூமென் கெய்லர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
O


1952 ல் ஆனந்தாஸ்ரமம் சென்ற போது அந்த முறை, அதை தம் வீடாக உணர்ந்தார். பப்பாவே தமது தந்தை என்பதையும் அறிந்தார். தமக்கு மட்டுமே தெரிந்த தம் வாழ்வின் நோக்கத்தை பப்பா உரையாடல்களில் வெளிப்படுத்தியதை அறிந்து ஆனந்தாஸ்ரமத்தை தமக்கு மிக நெருக்கமான இடமாக உணர்ந்தார்.
O
Fathers Mission என்று யோகி குறிப்பிட்ட தந்தையின் பிரபஞ்ச பணிக்காக நிகழ்ந்த அவதாரமே யோகி என்தை நம்மால் உறுதியாக உணர முடிகிறது. இந்த அவதார நோக்கம் அவர் வாழ்வின் வழியெங்கும் வெளிப்பட்டே வந்துள்ளது.
O


ஆனால் யோகி தம்மை பிச்சைக்காரர் என்று அறிவித்து மிக எளிமையான வாழ்க்கையே மேற்கொண்டார். பிச்சைக்காரரிடம் ஒன்றுமில்லை எல்லாம் என் தந்தையே என்று தம்மை மறைத்து வாழ்ந்தார்.
வேதம் மறைபொருள் என்றே அழைக்கப்படுகிறது.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா