
நீள நினைவுக்கும் முடிவேது? கணக்கில்லாத பழம் ஏடுகள் பல
புரட்டி நினைவுப்பாதை
வகுத்து நினைவுச் சுவட்டோடு
ஓடி
எத்தனையோ மங்கலான, அருவங்கள் பலவும் எழுப்பி
ஏற்றிவைத்த ஒளிகாணாத
விளக்கிது காண் – என் உள்ளம்
மரமொன்றும், மலரென்றும், குழந்தை குமரியென்றும்
தீ வான் பிளிம்பென்றும்
, பலசுடர் விட்டு எல்லாமும்
ஒரு புள்ளியில் உள்ளடக்கி புள்ளிக்குள் மையத்தில்
மறைந்து தேய்ந்து இல்லாமற்போவதும்
விந்தையே!
சுழலவிட்ட கோளதுவாய்குரல் கூவிக்
கிழித்துக் கோடுகள்
பலவும் காலத்திலே கீறி அறியாத விசையாலே உருண்டோடி
கீழ்மேல் மேல் கீழாய்
, நடுவது பக்கமாய் பக்கம் நடுவாய்ஆழி ஆழி
உருட்ட வேகம் கெட்டே நினைவும் அழிந்ததே.மலர்ந்ததமிழ்ந்த
நினைவும் காலமெனும் கனவினிலே கருத்தவிந்த
காட்சியும், நெஞ்சம் நினைத்து உருவு தந்ததே!
