நிஜந்தன் கவிதை

தோள் அகன்ற பெண் புலி
கூண்டில் அசைந்த ஒலியில்
காட்டுப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து
கரு மேகங்களை உடைத்து
மழை பெய்து மாலை இருள்கையில்
வேப்பமரத்து ஈர நிழலில்
பால் குடித்து இளைப்பாறிய
கரும்பூனையின் பல்லில் சிக்கி
வலி எடுக்கும்
கோழி எலும்பு

One Comment on “நிஜந்தன் கவிதை”

Comments are closed.